கெமிக்கல் ஹேர் கலர் இல்லை… பக்க விளைவுகள் இல்லை… இள நரைக்கு இதோ தீர்வு..!
வயதாகும் பொழுது தலைமுடி நரைத்துப் போவது என்பது ஒரு சாதாரண பிரச்சனை தான். ஆனால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து விட்டால், அது ஒருவருக்கு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நரைத்த முடியுடன் வெளியே செல்வதை சங்கடமாக கருதுகின்றனர். இந்த இளநரை பிரச்சனை தற்போது பல இளைஞர்களிடத்தில் காணப்படுகிறது.
ஆனால் இது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் தலை முடியை கருகருவென மாற்றுவதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். தலை முடியை கருமையாக்க உதவும் மூலிகைகள் பல உள்ளன. அவை தலை முடியை கருமையாக்குவதோடு முடி வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியான முடியை ஏற்படுத்தும்.
ரோஸ்மேரி இலைகள் :ரோஸ்மேரியை தலைமுடிக்கு பயன்படுத்துவது முடியை கருமையாகவும், அதன் பளபளப்பை அதிகரிக்கவும் உதவும்.
சீமை கற்பூர இலை அல்லது முனிவர் இலை: சேஜ் பிளான்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முனிவர் இலைகளை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் கருமையான தலைமுடியை பெறலாம்.
பிளாக் டீ: பிளாக் டீ தலைமுடிக்கு தற்காலிகமாக கருமையை சேர்க்க உதவுகின்றன.
கருப்பு வால்நட்: பெரும்பாலும் கருப்பு வால்நட் தலைமுடியை கருமையாக்க ஒரு இயற்கையான ஹேர் டை ஆக பயன்படுத்தப்படுகிறது.
குப்பைமேனி இலைகள்: குப்பைமேனி இலையில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து தலை முடியை கருமையாக்கி, அதன் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.
மருதாணி இலைகள்: மருதாணி என்பது தலை முடிக்கு இயற்கையான ஹேர் டையாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பொருளாகும். இது இண்டிகோ மற்றும் நெல்லிக்காய் பொடி போன்ற பல பொருட்களுடன் இணைத்து பயன்படுத்தப்படும் பொழுது தலைமுடிக்கு இயற்கையான கருமையை தருகிறது.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் தலைமுடியை கருமையாக்க கூடிய பண்புகளும், தலைமுடிக்கு ஈரப்பதத்தை சேர்த்து அதனை கண்டிஷன் செய்யக்கூடிய பண்புகளும் காணப்படுகிறது.
காபி பொடி: தலைமுடியை காபி தண்ணீரில் அலசுவது அதற்கு தற்காலிகமான கருமையை கொடுக்க உதவுகிறது.
கிராம்பு: வேறு சில பொருட்களுடன் பயன்படுத்தப்படும் பொழுது கிராம்பு தலைமுடியை கருமையாக்குவதாக நம்பப்படுகிறது.
இண்டிகோ: பெரும்பாலும் மருதாணியுடன் இண்டிகோ இயற்கையான ஹேர் டை ஆக பயன்படுத்தப்படுகிறது. இது தலை முடியை கருமையாக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள இந்த மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரையை போக்கி, கருமையான முடியை சிரமம் இல்லாமல் பெறலாம். எனினும், இதனுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்கிறது.