ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவை

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த பனீர் மோமோஸ் செய்யலாமா..? ரெசிபி இதோ…

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ் (momos). இது தென் இந்தியாவிலும் தற்போது பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது என பல வகைகளில் கிடைக்கிறது. மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஏனென்றால், காலை, மாலை, இரவு நேரங்களில் ஏற்படும் குட்டி பசியை தீர்க்க இது சிறந்த உணவு.

எப்போது வெளியில் சென்றாலும், பானிப்பூரி மற்றும் மோமோஸ் சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை. சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த பனீர் மோமோஸ் ஐ வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா – 1 1/2 கப்.

உப்பு – 1/4 ஸ்பூன்.

பூண்டு – 1 ஸ்பூன் நறுக்கியது.

இஞ்சி – நறுக்கியது 1 ஸ்பூன்.

பச்சை மிளகாய் – நறுக்கியது 2 ஸ்பூன்.

குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது.

கேரட் – 1/4 கப் துருவியது.

முட்டைக்கோஸ் – 1/4 கப் துருவியது.

வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது – சிறிது.

வெங்காயத்தாள் கீரை நறுக்கியது – சிறிது.

பன்னீர் – 1 கப் துருவியது.

உப்பு – 1/2 ஸ்பூன்.

எண்ணெய் – அரை கப்.

மிளகு தூள் – 1 ஸ்பூன்.

சில்லி சாஸ் – 2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில், மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்பு தண்ணீர் ஊற்றி பரோட்டா மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

இப்போது, கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.

இதை அடுத்து, அதில் துருவிய கேரட், முட்டை கோஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

பின்னர், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்க்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள பனீரை நன்றாக துருவி அதில் சேர்க்கவும்.

இதை தொடர்ந்து அதில், மிளகு, சில்லி சாஸ், சோயா சாஸ், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்கவும்.

தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போல மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.

மாவின் நடுவில் முறையாக தயார் செய்து வைத்துள்ள பன்னீர் சேர்மத்தை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும்.

இதை தொடர்ந்து, மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோஸை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான பனீர் மோமோஸ் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker