இரண்டு வாரம் ஆனாலும் தயிர் புளிக்காமல் இருக்க வேண்டுமா? இப்படி செய்து பாருங்க…
பொதுவாகவே இந்தக் கோடைக் காலத்திற்கு எதிராக போராட வீட்டில் நல்ல குளிர்மையான உணவுப் பொருட்களை சேர்த்து வைப்பது வழக்கம் தான்.
அப்படி சேமித்து வைக்கும் பொருட்கள் சில விரைவில் பழுதாகி விடும். அதில் இந்த தயிரும் ஒன்று தான். தயிரானது விரைவில் புளிப்பு சுவையை அடைந்து விடும். இப்படி புளிப்பு தன்மை ஏற்படாமல் சேமித்து வைக்க இந்த டிப்ஸ் உதவும்.
தயிர் புளிக்காமல் இருக்க
நீங்கள் வீட்டில் அதிகமாக தயிர் வாங்கி வைத்திருந்தால் அதனை சேமித்து வைப்பதற்கு ஏற்ற பாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு மண் பாத்திரம் தான் சிறந்தது. மண்பானையில் தயிரை சேமித்து வைத்தால் தயிர் குளிர்ச்சியாக பல நாட்கள் சுவையாக இருக்கும்.
தயிரை உறைய வைக்க சிறந்த நேரம் இரவு தான். பகலில் வைத்தால் மோர் போல ஆகிவிடும் அதனால் இரவில் தயிரை உறைய வைத்து காலையில் ப்ரிட்ஜில் வைத்தால் புளிப்பு இல்லாமல் இருக்கும்.
தயிரை குளிர்ச்சியான இடத்தில் அல்லது ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். வெதுவெதுப்பான இடத்தில் வைத்தால் தயிர் புளிப்பாக மாறிவிடும்.
வீட்டில் பால் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் மற்ற உணவுப் பொருட்களை வைக்க கூடாது. ஏனெனில் தயிரை பக்கத்தில் மற்ற உணவுகளை வைத்தால் வாசனையை உறிஞ்சி புளிப்பாக மாறிவிடும்.