காலை உணவை மாற்றினால் உடல் எடைக் குறையுமா? அப்படியானால் என்ன உணவுகளை சாப்பிடலாம்
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள்.
சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள் காலை உணவில் சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் எடைக் குறையும்.
காலை நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
மேலும், நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் உடல் எடையைக் குறைப்பது போலவும் இருக்க வேண்டும் அப்படியான உணவுகள் என்னென்ன தெரியுமா?
உடல் எடைக் குறைக்கும் காலை உணவுகள்
பொதுவாகவே இந்தியாவில் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்கும். இவை இரண்டும் நம் உடலுக்கு எந்த கெட்டவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. இட்லி தோசையில் இருக்கும் சத்துக்கள் மட்டுமல்லாமல் சாம்பாரில் காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடும் போது இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.
காலை வேளையில் இலகுவாக செய்யக்கூடிய உணவு என்றால் அது அவல் தான். அவலில் காய்கறி சேர்த்து உப்புமாவாகவும் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் வயிற்றையும் நிரப்பி செரிமான பிரச்சினைகளை இல்லாமல் செய்யும். மேலும் காலையில் அவல் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியமாகவும் உடல் எடையும் குறையும்.
கோதுமை ரவை கஞ்சியும் காலையில் சத்தான உணவுதான். இதனை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் சீராகி உடல் பருமனைக் குறைக்கும்.
காலை உணவிற்கு தானியம் மிக முக்கியமாகும். இந்த தானியங்களில் முளைக்கட்டிய பயறு நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களையும் வைட்டமின்களையும் தாதுக்களையும் கொண்டிருக்கிறது இது உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கும்.
முட்டையில் அதிக புரதம் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் முட்டையில் தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அதனால் முட்டையை காலையில் வேகவைத்தும் அல்லது ஆம்லெட்டாகவும் சாப்பிட்டால் எடை குறைக்கும்.