சருமத்தை பஞ்சு போல் மாற்றி உங்களை இளமையாக காட்டனுமா..? தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..!
நம் அனைவருக்கும் வயது அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையில் சில மாற்றங்கள் உண்டாகும். காலப்போக்கில் சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையானது படிப்படியாக குறைந்து, சருமம் கவர்ச்சியாக காட்சியளிப்பதும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
ஆனால் சில குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி நமது வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள கொலாஜனை தக்க வைத்துக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு இளமையாக காட்சியளிக்கவும் நம்மால் முடியும். அந்த வகையில் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றினால் இளமையாக காட்சியளிக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்
உடற்பயிற்சி: அதிகப்படியான உடல் இயக்கங்களை மேற்கொள்ளும் போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது இது சரும ஆரோக்கியத்திற்கும், கொலாஜன் உருவாக்கத்திற்கும் வழி வகுக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்
சரும பராமரிப்பு: நமது சருமத்தை ஆரோக்கியமாக, அழகாக வைத்து கொள்ள வேண்டுமெனில் தினசரி இருமுறையாவது முகத்தை நன்றாக கழுவி சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஹையாலுரோனிக் மற்றும் செராமைட்ஸ் உள்ள மாய்சுரைசர்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும்.
எக்ஸ்ஃபோலியேஷன்: நமது சருமத்தில் உள்ள நச்சுக்களையும், இறந்த செல்களையும் அவ்வபோது மென்மையான முறையில் எக்ஸ்ஃபோலியேஷன் செய்து வெளியேற்ற வேண்டும் இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும், கவர்ச்சியுடனும், இளமையாகவும் காட்சியளிக்கும். மேலும் தோலின் அமைப்பு மற்றும் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்க இது உதவுகிறது. ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள் மற்றும் பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள் கலந்துள்ள கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்டை பயன்படுத்தலாம்.
கொலாஜன் ப்ராடக்டுகள்: சரும பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்யும்போது ரெட்டினாய்ட்ஸ், பெப்டைத்ஸ், வைட்டமின் சி, நியாசினமைட் ஆகியவை கலந்துள்ள அழகு சாதன பொருட்களையும், சரும பராமரிப்பு பொருட்களையும் தேர்வு செய்ய வேண்டும். இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நெகிழ்ச்சி தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
மசாஜ்: ஃபேஷியல் மசாஜ் அவ்வபோது செய்வதன் மூலம் அந்த இடத்தில் ரத்த ஓட்டமானது அதிகரித்து சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்க உதவுகிறது. கைககளை நன்றாக சுத்தம் செய்துவிட்டோ அல்லது ஃபேஷியல் ரோலர்களை பயன்படுத்தியோ ஃபேஷியல் மசாஜ் செய்யலாம்.
போதுமான தூக்கம்: ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 7 – 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இரவு நேரங்களில் தூங்கும்போது உடலானது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது, செல்களை மறு உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறையின் போது சரும செல்களும் புதுப்பிக்கப்படுவதால் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையானது அதிகரிக்கிறது.