வானில் நட்சத்திரங்கள் பார்ப்பதை ரொம்ப மிஸ் பண்றீங்களா..? இந்த இடங்களுக்கு போனால் கண்டு ரசிக்கலாம்..!
முன்னர் எல்லாம் இரவு நேரத்தில் மாடியில் படுத்துக்கொண்டு விண்மீன்களை பார்ப்பது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் வானை வேடிக்கை பார்ப்பது என்பது புது வித சுற்றுலாவாக மாறி வருகிறது, அதற்காக தனி இடங்களும் உபகரணங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகை சுற்றுலாவிற்கு skygazing tourism என்று பெயர் .
உலகமயமாதல், நகரமயமாதல் என்ற பெயரில் நகரங்கள் எல்லாம் ஒளியை கக்கி வருவதால் வானத்தில் நட்சத்திரங்கள் அதிகம் தெரிவதில்லை. அதனால், ஒளி குறையான, ஊரில் இருந்து ஒதுக்குபுறமாக உள்ள இடங்களில் இதற்கான தலங்கள் அமைக்கப்படுகிறது. அப்படி இந்தியாவில் வானத்தை தெளிவாக வேடிக்கை பார்க்கக்கூடிய இடங்களை உங்களுக்கு சொல்கிறோம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 9680 – 13450 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள கிப்பர் மற்றும் காசா கிராமங்கள் நட்சத்திரங்களைத் தெளிவாக பார்க்க ஏற்ற இருட்டான இடங்கள். காண சிறந்த இடமாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருந்தால் – நீங்கள் ஒரு ஷூட்டிங் ஸ்டார்களையும் பார்க்கலாம்.
அந்தமான் நிக்கோபார் தீவின் தலைநகரில் அமைந்துள்ள போர்ட் பிளேர் நீல் தீவு. வெள்ளை மணல் கடற்கரைகள், அழகான பவளப்பாறைகள் தாண்டி இரவு நேரங்களில் நீல வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்க்க ஏற்ற இடமாகும்.
லடாக் என்பது நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காகவே போக வேண்டிய இடமாகும். துர்டுக் கிராமம், பாங்கோங் சோ ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு பகுதிகளில் தெளிவான காற்று, அழகான வானம் உங்களை உங்களை மெய்மறக்க செய்யும். தென்மேற்கு லடாக்கில் உள்ள சாங்தாங் குளிர் பாலைவன வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே ஹான் லே கிராமத்தைதில், இந்தியாவின் முதல் இரவு வான சரணாலயம் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனமான , ரான் ஆஃப் கட்ச், இந்தியர்கல் அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய அழகிய இடம். வெள்ளை மணல், தெளிவான வானம், கொண்ட இந்த பாலைவனத்தில் உள்ள கேம்புகளில் தங்கி மின்னும் நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கலாம்.
தமிழகத்தில் இரவு வானை ரசிக்க கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி சிறந்த இடமாகும். இது பழனி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. அதன் தனித்துவமான புவியியல் நிலை நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக கொடைக்கானலை மாற்றியுள்ளது. இங்கும் அதிஷ்டம் இருந்தால் ஷூட்டிங் ஸ்டார் எனப்படும் வாள்மீன் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
காபி தோட்டங்கள், பொங்கி வழியும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலையேற்றப் பாதைகளுக்கு பிரபலமாக அறியப்பட்ட கூர்க், அதைத் தாண்டி அதன் பயணிகளுக்கு தெளிவான வானம் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் அழகிய காட்சியையும் பரிசாக வழங்குகிறது.