பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா.? இந்த 6 ஆன்டி-ஏஜிங் மூலிகைகளை பயன்படுத்துங்கள்.!
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம், பல தீவிர உடல் நோய்களுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் பல சிகிச்சைகள் மற்றும் நிவாரணங்களை கொண்டுள்ளது. தோல் பராமரிப்பில் நவீன அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட, ஆரோக்கியமான சருமத்திற்கான பல வழிகளை கொண்டுள்ளது.
வயதானாலும் கூட சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான முழுமையான பலன்களை ஆயுர்வேதம் வழங்குகிறது. அந்த வகையில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு 6 அற்புத ஆன்டி-ஏஜிங் மூலிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
மஞ்சள்: மஞ்சள் என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல சருமத்தையும் மேம்படுத்தும் ஒரு தங்க பொக்கிஷமாகும். இது நல்ல சிறப்பான அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. மஞ்சள் பொடியை தேன் அல்லது பாலுடன் மிக்ஸ் செய்து பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்தில் மெதுவாக அப்ளை செய்யவும். சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தை மிகவும் பிரகாசமாக்கும்.
கற்றாழை: கற்றாழையை சருமத்திற்கு இயற்கை தந்துள்ள இனிமையான அமுதம் என்று கூறலாம். சருமம் இழந்த ஹைட்ரேஷனை நிரப்புவதோடு நம் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் ஒளிர செய்வதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்கள் முகத்தில் தடவி, அது தரும் புத்துணர்ச்சி மற்றும் சரும நன்மைகளை பெறுங்கள். கூலான கற்றாழை ஜெல்லை உங்கள் சருமத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் சுருக்கம் மற்றும் கோடுகள் குறையும். தவிர இந்த ஜெல் மசாஜ் சருமத்திற்கு இளமை தோற்றம் மற்றும் பொலிவை அளிக்கிறது.
வேம்பு: ஆரோக்கிய சருமத்திற்கான இயற்கை கவசமாக இருக்கிறது வேப்பிலை. இது சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. வேப்பிலையானது முகப்பரு உள்ளிட்ட பல் தோல் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. சருமத்தில் பாதிப்புகள் இருந்தால் சிறிதளவு வேப்பிலைகளை எடுத்து தண்ணீரில் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம். சுமார் 15-20 நிமிடங்களுக்கு இந்த வேம்பு பேஸ்ட்டை அப்படியே காய வைத்து பின் கழுவவும். தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த பேஸ்ட் இயற்கையான தீர்வை அளிக்கிறது.
சந்தனம்: பல ஸ்கின் டைப்களுக்கும் அற்புதமான நன்மைகளை அளிக்கும் நறுமண மூலிகையாக உள்ளது சந்தனம். உங்களது சருமம் வறண்டிருந்தால் சந்தன பவுடர், தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின் முகத்தை கழுவி விடுங்கள். இது உங்கள் சருமத்தை மென்மை மற்றும் ஹைட்ரேட்டாக்குகிறது. நல்ல நிறத்தை கொடுக்கிறது. எண்ணெய் பசை சருமம் என்றால் சந்தன பவுடர், ஃபுல்லர்ஸ் எர்த் (fuller’s earth)மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவவும். இந்த பேக் சருமத்திலிருக்கும் அதிக எண்ணெயை உறிஞ்சி நல்ல பொலிவை அளிக்கும்.
ரோஸ்வாட்டர்: உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் ரோஸ்வாட்டரை சேர்ப்பதன மூலம் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கப்படுகிறது மற்றும் ஹைட்ரேஷனை வழங்குகிறது. சருமத்தில் இருக்கும் ரெட்னஸை குறைத்து புத்துணர்ச்சியான நிறத்தை கொடுக்கிறது. ரோஸ்வாட்டரை இயற்கையான மேக்கப் ரிமூவராக பயன்படுத்தி உங்கள் சருமத்தை சுதந்திரமாக சுவாசிக்க வைக்கலாம்.
ஷதாவரி: ஆயுர்வேத தோல் பராமரிப்பு முறையில் ஷதாவரி அதாவது தண்ணீர் விட்டானை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் இதனை வாய்வழியே எடுத்து கொள்வதன் மூலம் நம்பமுடியாத அளவிலான சரும ஆரோக்கியத்தை சிறப்பாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பவுடர்,காப்ஸ்யூல்கள் அல்லது லிக்விட் எக்ஸ்ட்ராக்ட் உள்ளிட்ட பல வடிவங்களில் கிடைக்கும் ஷதாவரி பெரும்பாலும் டயட்ரி சப்ளிமென்ட்டாக உட்கொள்ளப்படுகிறது. இதன் முழுப்பலன்களை பெற வெதுவெதுப்பான நீர் அல்லது பாலுடன் எடுக்கலாம்.