சுருட்டை முடியை பராமரிக்க ரொம்ப கஷ்டமா இருக்கா..? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்..!
பெண்கள் பெரும்பாலும் தினசரி ஹேர் வாஷ் செய்வது கடினம் தான். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என்றுதான் நீளமான கூந்தல் இருப்பவர்களே தலைக்கு குளிப்பார்கள். இந்த நிலையில் இயற்கையாகவே சுருள் சுருளாக அழகான முடி இருப்பவர்களுக்கு தலைக்கு குளிப்பது, சுருள் முடி பராமரிப்பு என்பதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். சுருட்டை முடி கொண்டவர்கள் ஹேர் வாஷ் செய்யும் பொழுது ஏற்கனவே கொஞ்சம் வறட்சியாக இருக்கும் கூந்தலின் தன்மை மேலும் வறண்டு விடும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்; ஆனால் அதனை சரியாக பராமரிப்பது மிக மிகக் கடினம்.
சரியான ஹேர் கேர் பொருட்களை தேர்வு செய்வது முதல் இயற்கையாகவே இருக்கும் சுருள்களை பாதிக்காமல், கூந்தல் அழகாக இருப்பதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சுருட்டை முடியை பராமரிப்பது உங்களுக்கு கடினமாக உணர்ந்தால் இந்த எளிமையான ஹேர் வாஷ் டிப்ஸை பின்பற்றுங்கள்.
ஷாம்பூ பயன்படுத்தும் முன்பு கூந்தலை ஹைட்ரேட் செய்யுங்கள்
பொதுவாகவே தலைக்கு குளிக்கும் முன்பு சிறுது நேரம் எண்ணெய் வைத்து ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கிறது. சுருள் கூந்தல் இருப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க, நிச்சயமாக எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் ஏதாவதை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது, ஷாம்பு போட்டு ஹேர்வாஷ் செய்த பிறகு கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க உதவும்.