மேக்கப்பை சரியான முறையில் அகற்ற உதவும் எளிய வழிகள்..!
கூட்டத்திலிருந்து தனித்து அழகாக தெரிய பலரும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி மேக்கப் போட்டு கொள்கிறார்கள். எனினும் போட்டிருக்கும் மேக்கப்பை அகற்றுவது குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான விஷயமாக இருக்கும்.
ப்ரோக்கன் ஐலேஷஸ், ஸ்டைஸ், ஐ டிஸ்கம்ஃபர்ட் மற்றும் ஐ இன்ஃபக்ஷன்ஸ் உள்ளிட்ட சில பிரச்சனைகள் கண்களுக்கு போடப்படும் மேக்கப்பை அகற்றாமல் அப்படியே விடுவதால் ஏற்படுகின்றன. அதே போல, போட்டிருக்கும் மேக்கப்பை கலைக்காமல் தூங்குவதால் முகப்பருக்கள் மற்றும் சுருக்கங்கள் கூட ஏற்படலாம். எனவே தான் வெளியே சென்று வந்த பிறகு உங்கள் மேக்கப்பை அகற்றுவது முக்கியம். மேக்கப் போடுவதை போலவே மேக்கப்பை உரிய முறையில் அகற்றுவதும் முக்கியமானது. உங்கள் முகத்தில் இருந்து மேக்கப்பை எளிதாக அகற்றுவதற்கான ஈஸி டிப்ஸ்கள் இங்கே…
சரியான மேக்கப் ரிமூவரை பயன்டுத்துங்கள்: மேக்கப்பை அகற்றும் போது கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் தவறான மேக்கப் ரிமூவரை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான அடையாளம் அதனை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை மசாஜ் செய்ய வேண்டியிருப்பது. ஆம், உங்கள் மேக்கப்பை அகற்ற போதுமானதாக இல்லை என்பதை குறிக்கிறது. உங்கள் சரும வகையின் அடிப்படையில் மேக்கப் ரிமூவர் ஃபார்முலாவை தேர்ந்தெடுக்க நினைவில் கொள்ளுங்கள். எண்ணெய் அல்லது சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள் லைட் ஜெல் அடிப்படையிலான க்ளென்சர்களை பயன்படுத்தலாம்.
சாஃப்ட்டான மேக்கப் ரிமூவல் துணியை பயன்படுத்தவும்: மேக்கப் ரிமூவல் துணி மிகவும் மென்மையாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். மேக்கப்பை அகற்றும் போது முதலில் கண்கள், உதடுகள் மற்றும் புருவம் போன்ற பிக்மென்டட் எரியாவிலிருந்து மேக்கப்பை அகற்ற துவங்குங்கள். பிறகு கைகளை கழுவி விட்டு பின் உங்கள் முகத்தின் மீதமுள்ள இடங்களை துடைக்க மேக்கப் ரிமூவர் துணியின் ஒரு ஃபிரெஷ்ஷான பகுதியை பயன்படுத்தவும்.
சீட் மாஸ்க்ஸ் மற்றும் டோனர்களை பயன்படுத்துங்கள்: நீங்கள் டோனர் மற்றும் ஷீட் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி போர்ஸ்களை மூடலாம் மற்றும் மேக்கப் பயன்பாடுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை மீட்டெடுக்கலாம்.
மேக்கப்பை நீக்கிய பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்: பெரும்பாலும் பலர் தூங்க செல்லும் முன் முகத்தை வாஷ் செய்வதில்லை. மேக்கப்பை நீக்கிய பிறகு உங்கள் சருமத்தை ஃபேஸ்வாஷ் மூலம் முறையற்ற முறையில் வாஷ் செய்வதால் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தூங்க செல்வதற்கு முன்பு ஒருமுறை முகத்தை நன்கு கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்: உங்களது சருமம் ட்ரை ஸ்கின் அதாவது வறண்ட சருமம் இல்லை என்றாலும் கூட மேக்கப்பை அகற்றிய பின் சிறிதளவு Moisture-ஐ பயன்படுத்த வேண்டும். உங்கள் லிப்ஸ்ஸ்டிக்கை நீங்கள் அகற்றினால் உங்கள் உதடுகளை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்.
கழுத்து மற்றும் காதுகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்… நீங்கள் ஸ்கின் கேர் தயாரிப்புகளை அப்ளை செய்யும் போது உங்கள் கழுத்து மற்றும் காதுகளையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். நாளின் முடிவில் குளிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்காது என்பதால் கழுத்து மற்றும் காதுகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது.