பொலிவான சருமம் வேண்டுமா..? இதோ ஈசியான ஓட்மீல் ஃபேஸ் மாஸ்க்.!
வெயில் காலம் வந்துவிட்டாலே வறண்டு, காய்ந்து போன சருமம் நம்மை பாடாய் படுத்திவிடும். கவலையை விடுங்கள். ஃபேன்சியான பார்லருக்குச் சென்று உங்கள் சருமத்தை பொலிவாக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். எப்போதாவது அப்படி செலவு செய்து அழகு படுத்துக் கொள்ளலாம். ஆனால் பலருக்கும் அடிக்கடி நவீன ஸ்பா மற்றும் பார்லர்களுக்கு பணம் செலவழிக்க முடியாது, சிலருக்கு நேரமும் இருக்காது. இதற்குபதிலாக உங்கள் வீட்டின் அருகிலேயே உள்ள, மருந்து கடைகளில் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும், ஃபேஸ் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். ஆனால் இதற்கு ஆகும் செலவையும் கூட நீங்கள் மிச்சப்படுத்தலாம்!
உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருளை வைத்தே, யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயாரிக்க கூடிய அற்புதமான ஃபேஸ் மாஸ்க் ஒன்று உள்ளது. அட ஆமாங்க, உங்க சமையல் அறையில் இருக்கும் ஓட்ஸ் மட்டும் போதும்; சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அருமையான ஃபேஸ் மாஸ்க்கை சுலபமாக செய்யலாம்.
வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்வதில் உள்ள சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்த ஃபேஸ் மாஸ்கை ஜாரில் வைத்து, பிரிட்ஜில் வைத்து விட்டால், உங்களுக்கு தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு டீ ஸ்பூன் தேன்
ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்
ஓட்ஸ், கால் கப்
எப்படி தயார் செய்வது?
ஒரு டீ ஸ்பூன் தேனையும் ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு, தனியாக ஒரு பாத்திரத்தில் கால் பங்கு ஓட்மீலை (Oatmeal) எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் இதை சமைத்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு சமைத்து வைக்கப்பட்ட ஓட்மீலோடு தேனையும் ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக சேர்த்து கலக்குங்கள்.
அவ்வுளவுதான். உங்கள் முகத்திற்கு பொலிவை தரக்கூடிய ஃபேஸ் மாஸ்க் ரெடி.
இப்போது நீங்கள் தயார் செய்த ஸ்க்ரப்பை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறிது சிறிதாக முகத்தில் தடவுங்கள். கண்களில் பூசாதீர்கள்.
சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் உங்கள் முகம் பிராகாசம் அடைவதோடு உங்களுடைய சரும ஆரோக்கியம் மேம்பட்டு, பொலிவாகும். இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உடனே ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்ய ரெடி ஆகுங்கள்.