சொன்ன நம்பமாட்டீங்க… எப்பவும் இளமையாக தெரிய இதை பயன்படுத்தி குளிங்க!
ஆண், பெண் என இருவருக்கும் சருமத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். அனைவரும் தங்களின் சருமம், இளமையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்து சந்தைகளில் விற்கும் கிரீம்களை வாங்கு பயன்படுத்துவோம். ஆனால், நமக்கு எந்த விதமான பயனும் அதனால் கிடைக்காது.
அந்தவகையில், இரசாயன சோப்பு மற்றும் கிரீம்களை பதிலாக தேங்காய் பால், தேன் உள்ளிட்ட பொருட்களை வைத்து வீட்டிலேயே எப்படி பாடி வாஷ் செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் – 1/2 கப்.
தேன் – 1 ஸ்பூன்.
கிளிசரின் – 2 ஸ்பூன்.
ஜோஜோபா எண்ணெய் – 3 ஸ்பூன்.
டீ ட்ரீ எண்ணெய் – 3 சொட்டு.
லாவண்டர் எண்ணெய் – 2 சொட்டு.
செய்முறை :
முதலில், ஒரு குடுவையில் தேங்காய் பால், தேன், ஜோஜோபா எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
இதை தொடர்ந்து, அதில், குறிப்பிட்ட அளவு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த திரவத்தை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைத்தால் சரும பொலிவுக்கு உதவும் குளியல் திரவம் தயார்.
பயன்படுத்தும் முறை :
பாத் டப் பயன்படுத்தி குளிப்பவர்கள் இந்த திரவத்தை வழக்கமான முறைப்படி பாத் டப் தண்ணீரில் திரவத்தை கலந்து குளிக்கலாம்.
பக்கெட் தண்ணீரில் குளிப்பவர்கள், ஒரு ஸ்பான்ஞ் உதவியுடன் இந்த திரவத்தை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
பயன்கள் :
தேங்காய் பால் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திரவம், சருமத்ததின் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதனால், உங்கள் சருமத்தின் இயற்கையான நிறம் மீட்டெடுக்கப்படுவதுடன், சரும பொலிவுக்கு உதவுகிறது.
தேன் சருமத்தின் ஈரப்பத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கி மிருதுவான சருமத்தை பெறலாம்.
வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, உடல் துர்நாற்றம். இந்த எண்ணெயை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் நாம் உடல் துர்நாற்றம் மாறும். இந்த திரவத்தை பயன்படுத்தி தினமும் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த திரவத்தை அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட லாவண்டர் எண்ணெய் பயன்படுத்தி தயார் செய்துள்ளதால், சருமத்தில் காணப்படும் தீ தழும்புகள், காயங்கள் மற்றும் வடுக்கள் மறைந்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.