முடி உதிர்வு பிரச்சனையை சமாளிக்க முடியலையா..? உங்களுக்கான சில டயட் டிப்ஸ்..!
பலருக்கும் முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க பலரும் பலவித ஆயில்களை பயன்படுத்தி பார்க்கின்றனர். ஆனாலும் முடி உதிர்வு நின்றபாடில்லை என்று புலம்புவதை கேட்க முடிகிறது. நீங்களும் இவர்களில் ஒருவரா.! உங்கள் தலைமுடி ஏன் உதிர்கிறது என எப்போதாவது யோசித்ததுண்டா.. முடி உதிர்வுக்கான காரணங்களில் மன அழுத்தம், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகள், மாசுபாடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் மோசமான உணவுமுறையும் அடங்கும்.
முடி உதிர்தல் சிக்கலுக்கு உங்களின் உணவுமுறை முக்கிய காரணமாக இல்லாவிட்டாலும், நல்ல உணவு முறை மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழிலில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, முடி அமைப்பு மற்றும் முடி வளர்ச்சி இரண்டையும் ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கலாம். முடி வளர்ச்சியானது கலோரி மற்றும் புரத சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படலாம். தவிர திடீர் எடை இழப்பு அல்லது புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்து எடுத்து கொள்வதில் குறைபாடு போன்றவை பெரும்பாலும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.முடி உதிர்வை எப்படி நிறுத்துவது..?
முடி உதிர்வு சிக்கலை சரி செய்வதில் ஆரோக்கியமான முடி பராமரிப்பு முறையை தொடர்ந்து பின்பற்றுவதைத் தவிர, நல்ல ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் எப்போதும் சேர்ப்பதும் உதவுகிறது. ஏனென்றால் உங்கள் மயிர்க்கால்கள் வலுவாக இருக்க நிறைய ஊட்டச்சத்துகளும் தேவை. இவற்றை உணவில் இருந்து நாம் பெற முடியும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள் எவை..? நல்ல அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கும் எந்த உணவும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிடும் பிரபல டயட்டீஷியன் ஷீனம் கே மல்ஹோத்ரா, நம் தலைமுடிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றை வழங்கும் உணவுகள் பற்றி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். இவர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் முடி உதிர்வை தடுக்க நம் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகளை பகிர்ந்துள்ளார்.