ஆரோக்கியம்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

பிஸ்கெட்டில் குலோப் ஜாமூன் செய்யணுமா.. ரெசிபி இதோ

இனிப்பு பண்டம் என்றால் பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் குலோப் ஜாமூன் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.எல்லோரும் கடையில் இருக்கும் குலோப் ஜாமூன் மிக்ஸ் பவுடரை தான் வாங்கி குலோப் ஜாம் செய்கிறார்கள்.

ஆனால் இன்று வித்தியாசமாக முறையில் பிஸ்கட் குலோப் ஜாமூன் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 

பிஸ்கட்- 2 பாக்கெட்

சர்க்கரை- 1 கப்

ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை

பால்- 1/2 கப்

எண்ணெய்- தேவையான அளவு

செய்யும் முறை

முதலில் பிஸ்கட்  பக்கெட்டை எடுத்து அதை பிஸ்கட்டை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சக்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். இதனுடன் கொஞ்சம் ஏலக்காய் தூளையும் சேர்த்து காய்ச்சி பாகு எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்த பிஸ்கட் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

அந்த உருண்டைகளை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் உருண்டைகளை பொன் நிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அந்த உருண்டைகளை சர்க்கரைப்பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். சக்கரைப் பாகை உருண்டைகள் உறுஞ்சி எடுக்கும் வரை ஊற வைக்கவும். அவ்வாறு ஊற வைத்து எடுத்தால் குலோப் ஜாமூன் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker