நெயில் பாலிஷ் வச்ச உடனே காய வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
கலர் கலராக நெயில் பாலிஷ் வாங்கி ஆசையாய் ஆசையாய் பார்த்து பார்த்து வைத்தாலும், அந்த நெயில் பாலிஷ் சரியாக காயாமல் அழிந்துவிட்டால் மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா? நெயில் பாலிஷ் பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாக இந்த பிரச்சனையை ஒரு முறையாவது எதிர்கொண்டு இருப்பார்கள். எனினும் இதற்கு இவ்வளவு கவலைப்பட தேவையில்லை.
நெயில் பாலிஷ் வைப்பதற்கென்று ஒரு சில டிரிக்குகள் உள்ளன. அதனை பின்பற்றினாலே நீங்கள் விரும்பியது போலவே, அழகான நெயில் பாலிஷை சட்டென்று வைத்து உங்கள் கைகளை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் நெயில் பாலிஷ் விரைவாக காய என்னென்ன டிரிக்குகளை பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள் : நெயில் பாலிஷ் விரைவாக காய குளிர்ந்த நீரை அதன் மீது பயன்படுத்தலாம். இதற்கு நெயில் பாலிஷ் பூசிய பிறகு உங்கள் நகங்களை குளிர்ந்த நீரில் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் வரை குளிர்ந்த நீரில் கைகளை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வது நெயில் பாலிஷ் விரைவாக காய உதவும்.
புலோ டிரையர் பயன்படுத்தலாம் : பல பெண்கள் பார்ட்டி அல்லது வெளியே செல்வதற்கு முன்பு நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவசரமாக வெளியே செல்லும்பொழுது நெயில் பாலிஷை காய வைப்பதற்கு நேரம் இருக்காது. இது போன்ற நேரங்களில் நெயில் பாலிஷ் விரைவாக காய புலோ டிரையர் பயன்படுத்தலாம். இது நெயில் பாலிஷ் சீக்கிரம் காய உதவி செய்யும்.
டாப் கோட் பெயிண்ட் வாங்கிக் கொள்ளுங்கள் : நெயில் பாலிஷ் பயன்படுத்திய பிறகு டாப் கோட் பயன்படுத்துவதை பல பெண்கள் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் டாப் கோட் என்பது மிகவும் முக்கியமானது. இதனை பயன்படுத்தும் போது நெயில் பாலிஷ் விரைவாக காய்ந்து விடும். அதோடு நெயில் பாலிஷ் நிறமும் அதிக பளபளப்புடன் காணப்படும்.
கடைகளில் கிடைக்க கூடிய நெயில் பாலிஷ்களில் பிராண்டட் நெயில் பாலிஷ்கள் விரைவாக காய்ந்து விடும். ஆகவே இதுபோன்ற நெயில் பாலிஷ்களை வாங்கி பயன்படுத்துவது சிறந்த யோசனையாக இருக்கும். எனவே நெயில் பாலிஷ் வாங்கும் பொழுதே அதனைபயன்படுத்தி பார்த்து வாங்குவது நல்லது.
டபுள் கோட்டிங் வைப்பதற்கான சில டிப்ஸ் : நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பொழுது உடனுக்குடனாக டபுள் கோட்டிங் செய்வது நல்ல யோசனை அல்ல. இது நெயில் பாலிஷ் காய்வதற்கான நேரத்தை தாமதமாக்கும். ஆகவே முதல் கோட்டிங் வைத்ததும், அது காய்ந்த பிறகே இரண்டாவது கோட்டிங் போடுவது புத்திசாலித்தனம்.
லைட் கலரை தேர்ந்தெடுங்கள் : நீங்கள் வைக்கும் நெயில் பாலிஷ் உடனடியாக காய்ந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக நீங்கள் லைட் கலரிலான நெயில் பாலிஷ்களை வாங்குவது சிறந்தது. ஏனெனில் டார்க் ஷேடுகள் காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே நியூட், கிலாசி மற்றும் மெட்டாலிக் நெயில் பாலிசிஷ்ளை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நீங்கள் மெல்லிய அடுக்காக பூசம் பொழுது நெயில் பாலிஷ் விரைவாக காய்ந்து விடும். எனவே எப்பொழுதும் தடிமனான அடுக்குகள் பூசுவதை தவிர்த்து விடுங்கள்.
நெயில் பாலிஷ் விரைவாக காய உதவும் ஏழு டிப்ஸ்களை இந்த பதிவில் பார்த்தோம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.