ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவை

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும்

இளம் வயதில் வரும் வெள்ளை முடியை தடுக்க தேங்காய் எண்ணையில் இந்த 2 பொருள் சேர்த்து பூசினால் போதும். இதை ஒரு செய்த பார்த்து வித்தியாசத்தை உணருங்கள்.

இளம் வயதிலேயே வெள்ளை முடி என்பது இப்போது ஒரு பொதுவான பிரச்சனையாகியுள்ளது. தோற்றம் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையையும் பாதிக்கும் இந்த நிலையை சரிசெய்ய, பலர் ரசாயன அடிப்படையிலான முடி சாயங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், இது நிரந்தர தீர்வாக இல்லாமல் முடிக்கு தீங்கும் விளைவிக்கிறது. இதற்கு வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணையில் இரண்டு பொருள் சேர்த்து போட்டால் போதும்.

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும் | White Hair Into Black Hair Mix With 2 Coconut Oil

இந்த  எண்ணெயை தயாரிக்க 100 மில்லி  தேங்காய் எண்ணெய் 100 மில்லி எள்  எண்ணெய் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பானையில் தேங்காய் எண்ணெயும் எள் எண்ணெயும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடாகும்போது, அதில் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

கறிவேப்பிலை முற்றிலும் கருப்பாக மாறும் வரை அதை சமைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும். எண்ணெய் முழுமையாக ஆறியதும், அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும் | White Hair Into Black Hair Mix With 2 Coconut Oil

சேமித்த இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2-3 முறை, இந்த எண்ணெயை முடி வேர்களில் தடவவும். விரல்களின் உதவியுடன் மெதுவாக மசாஜ் செய்து, எண்ணெய் நன்றாக உறிஞ்சும்படி செய்யவும்.

1-2 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூவால் முடியை கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால், வெள்ளை முடியில் வித்தியாசத்தை சில வாரங்களில் காணலாம்.

இந்த எண்ணெயின் நன்மைகள்

முடி வேர்களை ஊட்டுகிறது

நரை முடியை இயற்கையாக கருப்பாக்குகிறது

முடியின் பளபளப்பும் அடர்த்தியும் அதிகரிக்கிறது

புரத இழப்பைத் தடுக்கிறது

முடியை ஈரப்பதமாக வைத்திருக்கிறது

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும் | White Hair Into Black Hair Mix With 2 Coconut Oil

கறிவேப்பிலை இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. இது முடி வேர்களைச் செயல்படுத்தி இயற்கையான கருமை நிறத்தை மீண்டும் பெற உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker