சமையல் குறிப்புகள்புதியவை

நீங்க இதுவரை நண்டு குழம்பு வைத்ததே இல்லையா..? அப்போ ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க!

காரைக்குடி செட்டிநாட்டு உணவு என்றாலே தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் கலவையாகும். செட்டிநாட்டு உணவுகளுக்கு என்றே தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இருப்பது நாம் அனைவரும் அறிவோம். எனவே தான் செட்டிநாடு உணவுகள் உலகளவில் பேசப்படுகிறது.

உங்களுக்கு நண்டு பிடிக்கும் என்றால், நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

நண்டு – அரை கிலோ.

சின்ன வெங்காயம் – 20.

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்.

பட்டை – 2.

பூண்டு பல் – 8.

மீடியம் சைஸ் கத்தரிக்காய் – 2.

தேங்காய் துருவல் – அரை கப்.

சீரகம் – 1 டீஸ்பூன்.

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்.

மீடியம் சைஸ் தக்காளி – 2.

சோம்பு – 1 டீஸ்பூன்.

வெந்தயம் – அரை டீஸ்பூன்.

கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – 1 சிறிது.

உப்பு மற்றும் எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

முதலில் ரெசிபி செய்ய எடுத்து வைத்துள்ள நண்டை நன்கு சுத்தமாக கழுவி தனியே எடுத்து வைக்கவும். இப்போது சுத்தமாக கழுவி எடுத்து வைத்துள்ள நண்டில் சிறிது உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.

இதற்கிடையில், சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சன்னமாக நறுக்கி கொள்ளவும். பின்னர், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, எடுத்து வைத்துள்ள பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும்.

எடுத்து வைத்துள்ள தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை போனதும், அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி 5 நிமிடம் வைக்க வேண்டும்.

நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker