என்ன பண்ணாலும் இந்த கூந்தல் பிரச்சனையை சமாளிக்க முடியலையா..? இந்த சிம்பிளான விஷயத்தை ட்ரை பண்ணுங்க..!
பெண்ணின் கூந்தல் என்றாலே அழகுதான்… அது நேரான கூந்தலாக இருந்தால் என்ன, சுருட்டைமுடியாக இருந்தால் என்ன, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவனுடைய கூந்தல் பொக்கிஷமாக கருதப்படுகிறது. எல்லா பெண்களுமே அவர்களது கூந்தலை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள்.
ஹேர் பேக் முதல் ஹேர் ஆயில் வரை ஹேர் மசாஜ் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துதான் பார்த்து விடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட கூந்தல் படியாமல் போகும் பொழுது அவர்களுக்கு ஆத்திரம் கொள்ளாது. அவசரமாக எங்காவது கிளம்பி கொண்டிருக்கும் பொழுது கூந்தல் படியாமல் போய்விட்டால் நிச்சயமாக கோபம் தான் வரும். இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துள்ளீர்களா?
ஆம் என்றால், உங்களுக்கான தீர்வு தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. Frizzy-ஐ சமாளிக்க ஒவ்வொருவரின் முடி வகைக்கேற்ப தீர்வுகளை பார்க்கலாம்.
சுருட்டை முடி: (curly hair) : சுருட்டை முடியானது இயற்கையாகவே அதன் அமைப்பு காரணமாக அடிக்கடி ஃப்ரிஸுக்கு ஆளாக நேரிடும். ஆகவே உங்கள் தலைமுடிக்கான பராமரிப்பு பொருட்களை வாங்கும் பொழுது, அதில் ஆல்கஹால் மற்றும் சல்பேட் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த இரண்டு பொருட்களும் தலைமுடியில் இருக்கக்கூடிய இயற்கை எண்ணங்களை அகற்றி, தலையை வறண்டதாகவும் வறண்டதாக மாற்றி விடும். இதற்கு பதிலாக சுருட்டை முடிக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சரைசிங் ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். லீவ் இன் கண்டிஷனர்கள் மற்றும் கர்லி கிரீம் போன்றவைகளும் Frizzy சிக்கலை சமாளிக்க உங்களுக்கு உதவலாம்.
நேரான கூந்தல்: (straight hair) : நேரான கூந்தல் கொண்டவர்களுக்கு பெரும்பாலும் ஃப்ரிஸு பிரச்சனை ஏற்படாது. இருப்பினும் இது எப்பொழுதாவது நடக்கலாம், குறிப்பாக ஈரப்பதம் நிறைந்த நாட்களில் ஃப்ரிஸு பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இது போன்ற நேரங்களில் மைல்டான ஷாம்புக்கள் மற்றும் கண்டிஷ்னர்களை பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல முடியின் நுனிகளில் லைட் வெயிட் ஹேர் ஆயில் அல்லது சீரம்களை பயன்படுத்துவது முடி வறட்சியை போக்கி ஃபிரிஸ் ஏற்படுவதை தடுக்கும். ஹேர் ஸ்டைலிங் செய்யும் பொழுது வெப்பத்திலிருந்து தலை முடியை பாதுகாக்கக்கூடிய ஸ்பிரேக்களை பயன்படுத்த மறக்காதீர்கள்.
அலை அலையான கூந்தல்: (wavy hair) : சுருட்டை முடி மற்றும் நேரான கூந்தல் ஆகிய இரண்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த அலை அலையான கூந்தலானது எப்பொழுதாவது ஃப்ரிஸுக்கு ஆளாகக் கூடும். இது போன்ற சமயத்தில் நீங்கள் அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். அகன்ற பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி முடியில் உள்ள சிக்குகளை அகற்றுதல் நல்லது. அதோடு லைட் வெயிட் ஸ்டைலிங் ப்ராடக்டுகளை பயன்படுத்துவது ஃப்ரீஸை சமாளிக்க உதவும்.