ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்கள் இது தான் – மருத்துவர் தரும் விளக்கம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக உள்ளது.
இந்தியாவில் ஆஸ்துுமா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்கள் காற்று மாசு முக்கிய காரணமாக உள்ளது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதை கட்டுப்படுத்த இன்ஹேலர் மருந்து தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த முடியும். அதே போல் தடுப்பூசி நிமோனியா எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு முறைகளையும் ஆஸ்துமா நோயாளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக கீரை வகைகள் பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என திருச்சியை சேர்ந்த ஆஸ்துமா அலர்ஜி மருத்துவர் கமல் கூறுகிறார்.