இதை மட்டும் பண்ணீங்கன்னா செக்கச் சிவந்த கன்னங்களை இயற்கையாகவே பெறலாம்..!
தெளிவான சருமம், செக்க சிவந்த புசுபுசுவென்ற கன்னம், உதடுகள், நீளமான முடி போன்றவை ஒவ்வொரு பெண்ணின் கனவாகவே இருக்கும். ஆனால் இவையெல்லாம் அனைவருக்கும் அமைவதில்லை. எனினும் ஒரு சில முயற்சிகளை செய்வதன் மூலமாக அழகும், ஆரோக்கியமும் கிடைக்க பெறும்.
செக்க சிவந்த கன்னம் ஆனது அழகின் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும், இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது. சிவந்த கன்னங்கள் இருப்பது சருமத்தில் நல்ல ரத்த ஓட்டம் இருப்பதை குறிக்கிறது. கன்னங்களில் காணப்படும் இந்த ரத்த ஓட்டத்திற்கு உடற்பயிற்சி, மனதளவில் ஏற்பட்ட மகிழ்ச்சி அல்லது குளிர்ந்த காலநிலை போன்றவை காரணமாக அமையலாம். சிவந்த கன்னங்கள் இருப்பது இளமையான தோற்றத்தையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த அழகையும் கூட்டிக் கொடுக்கும் செக்கச் சிவந்த கன்னங்களை ஒரு சில எளிய மற்றும் இயற்கையான முறைகள் மூலம் எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி : தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது கன்னங்களை இயற்கையாகவே சிவப்பாக மாற்றுகிறது.
![,[object Object], தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது கன்னங்களை இயற்கையாகவே சிவப்பாக மாற்றுகிறது.](https://images.news18.com/tamil/uploads/2023/04/cardio-6-1.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
மசாஜ் : உங்கள் விரல் நுனிகளைக் கொண்டு கன்னங்களை மென்மையாக மசாஜ் செய்வது அங்குள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், கன்னங்கள் சிவந்து காணப்படும்.
![,[object Object], ரோஸ் வாட்டர், தேன் மற்றும் தயிர் போன்றவை சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு அதனை பளபளக்கவும் செய்கின்றன. இதுபோன்ற இயற்கை பொருட்களால் ஆன ஃபேஷியலை பயன்படுத்துவது கன்னங்களை பளபளக்கச் செய்யும்.](https://images.news18.com/tamil/uploads/2023/04/skincare-4-1.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
ஃபேஷியல் : ரோஸ் வாட்டர், தேன் மற்றும் தயிர் போன்றவை சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு அதனை பளபளக்கவும் செய்கின்றன. இதுபோன்ற இயற்கை பொருட்களால் ஆன ஃபேஷியலை பயன்படுத்துவது கன்னங்களை பளபளக்கச் செய்யும்.
![,[object Object], பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, செக்கச் சிவந்த கன்னங்களை அளிக்கும்.](https://images.news18.com/tamil/uploads/2023/04/green-juice-8.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
ஆரோக்கியமான உணவு : பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, செக்கச் சிவந்த கன்னங்களை அளிக்கும்.
![,[object Object], தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலை ஹைட்ரேட் செய்வது, உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டும் இல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பேண உதவும். மேலும் சருமம் மினுமினுக்கும்.](https://images.news18.com/tamil/uploads/2023/04/Drinking-Water-805x503.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
சரியான அளவு தண்ணீர் பருகுதல் : தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலை ஹைட்ரேட் செய்வது, உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டும் இல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பேண உதவும். மேலும் சருமம் மினுமினுக்கும்.
![,[object Object], வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சருமத்தை நீராவியில் காட்டுவது சரும துளைகளை திறக்கச் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு சிவந்த கன்னங்களை பெறலாம்.](https://images.news18.com/tamil/uploads/2023/04/skincare-3-2.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
நீராவியிடுதல் : வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சருமத்தை நீராவியில் காட்டுவது சரும துளைகளை திறக்கச் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு சிவந்த கன்னங்களை பெறலாம்.
![,[object Object], ஆபத்து விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க கூடிய சன் ஸ்கிரீன் ஆனது சரும பிரச்சினைகளைத் தடுத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிவப்பான கன்னங்களை கொடுக்கும்.](https://images.news18.com/tamil/uploads/2022/10/power-sunscreen.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
சன் ஸ்கிரீன் : ஆபத்து விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க கூடிய சன் ஸ்கிரீன் ஆனது சரும பிரச்சினைகளைத் தடுத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிவப்பான கன்னங்களை கொடுக்கும்.
![ஒவ்வொருவரின் சருமமும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே இது போன்ற வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சிக்கும் பொழுது, நீங்கள் எதிர்ப்பார்க்கும் முடிவுகள் அவரவரின் சரும வகையைப் பொறுத்து மாறுபடலாம். வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வோருக்கு பொறுமை அவசியம்.](https://images.news18.com/tamil/uploads/2023/04/skincare-2-2.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)
ஒவ்வொருவரின் சருமமும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே இது போன்ற வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சிக்கும் பொழுது, நீங்கள் எதிர்ப்பார்க்கும் முடிவுகள் அவரவரின் சரும வகையைப் பொறுத்து மாறுபடலாம். வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வோருக்கு பொறுமை அவசியம்.