உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்புதியவை

தமிழ் புத்தாண்டு அன்று காலையில் கண் விழித்ததும் முதலில் இவற்றை எல்லாம் பார்த்து விடுவதோடு, இந்த இரண்டு பொருளையும் மறக்காமல் வாங்கி விட்டால் இந்த ஆண்டில் நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வது உறுதி.

தினமும் காலையில் கண் விழித்தவுடன் நாம் காணும் முதல் காட்சி தான் அன்றைய நாள் முழுவதும் நாம் புத்துணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு ஆதாரம். அதே போல தான் ஒரு வருடத்தின் முதல் நாளில் முதலில் நாம் பார்க்கும் பொருட்களை வைத்து தான் அந்த வருடத்தில் நாம் சீரும் சிறப்புமாக வாழ்வது இருக்கும் என்ற ஐதீகம் உண்டு. இதை யே தான் நாம் முன்னோர்கள் தமிழ் புத்தாண்டு கனி காணுதல் என்று ஒரு முறையாகவே பின்பற்றி வந்தார்கள். இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு நாளில் நாம் செய்ய வேண்டியவை குறித்த தகவல்களை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் புத்தாண்டு அன்று நாம் செய்ய வேண்டியது: தமிழ் புத்தாண்டை வரவேற்க நாம் அதற்கு முதல் நாளை அதாவது இன்றே நம்முடைய வேலைகளை தொடங்கி விட வேண்டும். வீடு, பூஜை அறை எல்லாம் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து பூ வைத்து அலங்காரம் செய்வது என அனைத்து வேலைகளையும் இன்றே முடித்து விடுவது சிறந்தது.

ஏனெனில் நாளை வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் வீடு துடைத்து சுத்தம் செய்பவற்றை தவிர்த்தல் நல்லது.

வியாழன் அன்று இரவில் ஒரு பெரிய தாம்பாள தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூக்கள் முக்கனிகள், ( மா,பலா,வாழை) இவை மூன்றும் கிடைக்கவில்லை என்றால் வாழைப்பழம் மட்டும் வைத்தால் கூட போதும். அதே போல் மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் இத்துடன் சில்லறை காசுகள், ரூபாய் நோட்டு (பத்து ரூபாய் இருந்தாலும் கூட பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள்), தானியங்கள், இனிப்பு, முகம் பார்க்க நல்லதாக ஒரு கண்ணாடி இந்த கண்ணாடியை தட்டில் வைக்கும் போது தட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும் . இத்துடன் உங்களிடம் இருக்கும் ஏதேனும் அணிகலன்கள் வெள்ளி, தங்கம் எது இருந்தாலும் வைத்துக் கொள்ளுங்கள் ( இது அத்தியாவசியம் கிடையாது). இவற்றை எல்லாம் வைத்து பிறகு இந்த தட்டை நீங்கள் உறங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். மறு நாள் சித்திரை ஒன்றாம் தேதி காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாக கண்ணாடியில் இந்த தாம்பாள தட்டில் உள்ள பொருட்களை எல்லாம் பார்த்த பின், உங்கள் முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் மங்களப் பொருட்கள் முதல் பணம், பழங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை ஒன்றாக வைத்து நாம் பார்க்கும் போது இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இந்த தட்டை பூஜை அறையில் வைத்தும் பார்க்கலாம். – Advertisement – அடுத்து வழிபாடு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் சித்திரை வழிபாடு செய்பவர்கள் ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக செய்து வைக்கலாம் இல்லையென்றால் இந்த தாம்பாள தட்டை பூஜை அறையில் வைத்து இந்த பழங்களை நெய்வேத்தியமாக வைத்து வணங்கலாம். இந்த நாளில் நாம் வாங்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருட்கள் மஞ்சள், உப்பு இது வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பும் சேர்ந்து வந்திருப்பதால் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் இதை வாங்கினால் மிகவும் விசேஷம் அல்லது மதியம் இலை போட்டு வணங்கும் நேரம் வாங்கி விடுங்கள்.

இதை மாலை விளக்கு வைக்கும் நேரத்திற்குள்ளாக வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்கி வழிபடுங்கள். வீட்டில் இருக்கும் பழைய உப்பு மஞ்சள் வைத்து வழிபட கூடாது. அதே போல் மதியம் உணவு வகைகளை தயார் செய்து அத்துடன் வேப்பம் பூ ரசம், மாங்காய் பச்சடி இரண்டையும் கட்டாயமாக செய்து வடை பாயாசத்துடன் பூஜை அறையில் படையல் வைத்து வணங்குவது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்தன்று மாலை வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று வாருங்கள். பகல் வேளையில் உங்களுக்கு செல்ல நேரம் இருந்தாலும் சென்று வாருங்கள். ஆலயத்திற்கு செல்லும் போது அங்கு உங்களால் முடிந்த அளவிற்கு யாருக்கு எனும் ஒருவருக்கு அன்னதானம் அல்லது ஏதேனும் ஒரு ஜீவராசிக்கு உங்கள் கையில் உண்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொண்டுங்கள். இது அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான தானமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker