புதியவைவீடு-தோட்டம்

வீட்டில் பல்லி நிறைய இருக்கா? இதோ அதை விரட்டும் எளிய வழிகள்!

வீட்டில் பல்லி நிறைய இருக்கா? இதோ அதை விரட்டும் எளிய வழிகள்!

வீட்டில் பல்லி இருப்பது சாதாரணம் தான். ஆனால் யாருக்கும் பல்லிகள் வீட்டில் இருப்பது பிடிக்காது. வீட்டில் அலமாரியைத் திறக்கும் போது, கதவை திறக்கும் போது பல்லிகள் மேலே இருந்து விழுந்தால், அது நிச்சயம் பிடிக்காது. பல்லிகள் பொதுவாக பாதிப்பில்லாதவை என்றாலும், அந்த பல்லிகள் வீட்டில் இருந்தால் அதை பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரது வீட்டின் சுவற்றில் எப்போதும் பல்லிகள் சுற்றிக் கொண்டிருந்தால், அது வீட்டின் அழகை கெடுப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் சற்று ஆபத்தானது.

ஏனெனில் பல்லிகளின் மலம் மற்றும் எச்சிலில் சால்மோனெல்லா என்று அழைக்கப்படும் பாக்டீரியா காணப்படுகிறது. பல்லியின் எச்சில் மற்றும் மலம் உண்ணும் உணவுகளில் விழுந்தால், அது ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே உங்கள் வீட்டில் பல்லிகள் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், அதை விரட்டும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள். கீழே வீட்டில் உள்ள பல்லியை விரட்டும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

மிளகு ஸ்ப்ரே

மிளகு ஸ்ப்ரேயைக் கொண்டு எளிதில் பல்லியை விரட்டலாம். முக்கியமாக இந்த மிளகு ஸ்ப்ரேயில் எவ்வித கெமிக்கலும் சேர்க்க தேவையில்லை. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், மிளகுத் தூளை நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி சுற்றும் சுவற்றில் தெளித்துவிட்டால் போதும், பல்லி வராது.

காபி

காபி பவுடரையும், புகையிலையையும் கொண்டு உருண்டையைத் தயாரிக்க வேண்டும். இந்த உருண்டையை பல்லி அதிகம் வரும் பகுதி அல்லது வீட்டின் மூலைமுடுக்குகளில் வையுங்கள். இதனால் இனிமேல் பல்லி வராது.

நாப்தலீன் உருண்டைகள்

உங்கள் வீட்டைச் சுற்றி நாப்தலீன் உருண்டைகளை ஆங்காங்கு வையுங்கள். பல்லிகளுக்கு இந்த உருண்டைகளின் கடுமையான வாசனை பிடிக்காது. எனவே இதை வீட்டு முலைகளில் வைத்தால், அதன் வாசனைக்கு பல்லி வராது.

குளிர்ந்த நீர்

பல்லிகளுக்கு வெதுவெதுப்பான பகுதி தான் பிடிக்கும். அந்த மாதிரியான பகுதிகளில் தான் பலி அதிகம் காணப்படும். உங்கள் வீட்டில் பல்லி அதிகம் சுற்றினால், ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் நீரை அப்பகுதிகளில் தெளியுங்கள்.

மயில் இறகு

உங்கள் வீட்டில் பல்லி அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், மயில் இறகை பல்லி வரும் இடத்தில் வையுங்கள். இதனால் பல்லி மயில் இறகைக் கண்டு அஞ்சி, இனிமேல் வராதாம்.

முட்டை ஓடு

முட்டை ஓட்டில் இருந்து வரும் நாற்றம், பல்லிகளுக்கு குமட்டலை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பல்லிகள் ஹாயாக சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டால், ஆங்காங்கு மூலைகளில் முட்டை ஓட்டை வையுங்கள்.

வெங்காயம்

வெங்காயத்தில் சல்பர் உள்ளது. இது தான் வெங்காயத்தின் தாங்க முடியாத நாற்றத்திற்கு காரணம். வீட்டில் பல்லிகள் அதிகம் இருந்தால், வெங்காயத் துண்டுகளை வீட்டில் ஆங்காங்கு வெட்டி வையுங்கள் அல்லது வெங்காய சாற்றினை நீரில் கலந்து, அந்நீரை ஸ்ப்ரே செய்யுங்கள்.

பூண்டு

பூண்டு பற்களின் வாசனையும் பல்லிகளுக்கு பிடிக்காது. உங்கள் வீட்டில் பல்லிகள் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், பூண்டு பற்களை வீட்டின் மூலைகளில் வையுங்கள் அல்லது பூண்டு சாற்றினை நீரில் கலந்து அந்நீரை பல்லி வரும் இடங்களில் தெளித்துவிடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker