உறவுகள்புதியவை

பெண்கள் உங்களை கழட்டி விட சொல்லும் டாப் காரணங்கள் இதுதான்… உங்ககிட்ட இருந்தா உடனே மாத்திக்கோங்க…!

பெண்கள் உங்களை கழட்டி விட சொல்லும் டாப் காரணங்கள் இதுதான்... உங்ககிட்ட இருந்தா உடனே மாத்திக்கோங்க...!

பெண்கள் சில சமயங்களில் கணிக்க முடியாதவர்களாக இருக்கலாம் ஆனால் முடிவெடுக்கும் போது, அவர்கள் பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சிந்திப்பார்கள். காதலைப் பொறுத்தவரையில் பிரேக்கப் என்பது ஆண், பெண் இருவருமே விரும்பாத நிகழ்வாக இருந்தாலும் சில தருணங்களில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும். தவறான ஒருவரை காதலிப்பதை விட காதல் முறிவு எவ்வளவோ மேலானது.

காதல் முறிவிற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அந்த காதல் முறியும் போது இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் பிரேக்கப் முடிவை எப்போதும் அவசரமாக எடுக்க மாட்டார்கள். அவர்கள் அதிகமாக பாதிக்கப்படும்போதோ அல்லது எல்லைகளை கடக்கும்போதோ மட்டும்தான் அந்த முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். காதல் முறிவுக்கு பொதுவாக பெண்கள் கூறும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதிர்ச்சியின்றி இருப்பது

முதிர்ச்சியின்றி இருப்பது ஒரு உறவுக்கு உண்மையில் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலான பெண்கள் முதிர்ச்சியடையாத ஆண்களுடன் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்று புகார் கூறுகிறார்கள். குழந்தைத்தனமான ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள் ஆனால் காதலிக்க மாட்டார்கள். அழகான சிறிய குழந்தைத்தனமான தருணங்கள் முக்கியம் ஆனால் முதிர்ச்சியடையாத ஆண்களுடன் பெண்கள் நீண்ட கால உறவில் இருக்க மாட்டார்கள்.

இறுக்கமாக இருப்பது

தங்களால் புரிந்து கொள்ள முடியாத ஆண்களை பெண்கள் புறக்கணிக்கிறார்கள். அவ்வப்போது மர்மங்கள் உறவில் அவசியம்தான், ஆனால் எப்போதும் புரிந்து கொள்ள முடியாத ஆண்கள் பெண்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறார்கள். ஆண்களும் சரி, பெண்களும் சரி இந்த வகையான ஆளுமையை வெறுக்கின்றனர். இவர்களை விட்டு பிரிவதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை.

முன்னுரிமை அளிக்கப்படாத போது

தங்களுக்கான முக்கியத்துவம் குறைவதை பெண்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் தேவையை புறக்கணிப்பது, முக்கியமான நாட்களை மறப்பது, அருகிலிருந்தாலும் வேறு இடத்தைப் பற்றி சிந்திப்பது போன்றவை பெண்களை வெகுவாக கோபப்படுத்தும். தங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் மறுக்கப்படும் போது பெண்கள் அந்த உறவை முறித்துக் கொள்ள தயங்குவதில்லை.

பணத்தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது

சரியோ, தவறோ சில பெண்கள் பணத்தை காரணம் காட்டி பிரிவதை மறுக்க முடியாது. பெண்கள் எப்போதும் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக் கொண்டவர்கள். மோசமான எதிர்காலத்தை காதலுக்காக ஏற்றுக்கொள்ளும் பெண்கள் வெகுசிலரே.

சுத்தமில்லாமல் இருப்பது

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் சுத்தமாக இல்லாத காரணத்திற்காக ஏற்படும் காதல் முறிவுகளின் எண்ணிக்கை வெகுவாக உள்ளது. ஆடைகள் மற்றும் காலுறைகளை துவைக்காமல் இருப்பது, குளிக்காமல் இருப்பது என சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் காதல் முறிவில் முக்கிய இடம் வகிக்கிறது. சுகாதாரத்தை வெறும் வார்த்தையில் மட்டும் வைத்திருக்கும் ஆண்களை பெண்கள் வெறுக்கிறார்கள்.

தனிமையாக உணர வைப்பது

காதலில் பெண்கள் தனிமையை உணர ஆரம்பிக்கும் போது அவர்கள் அந்த உறவில் இருந்து வெளியேற நினைப்பார்கள். காதலில் இருக்கும்போது ஆண்களும் சரி, பெண்களும் சரி மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது கிடைக்காத போது அர்த்தமற்றதாகவும், சுமையாகவும் மாறுகிறது. அந்த சூழ்நிலையில் பெண்கள் அந்த உறவிலிருந்து வெளியேறத்தான் விரும்புவார்கள்.

நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது

எப்போதாவது ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது பரவாயில்லை, பெண்களும் இதைச் செய்வார்கள் ஆனால் அவர்களுடனேயே எப்போதும் நேரம் செலவழிப்பது பெண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அது அவரது நண்பர்களை விட அவர்களை முக்கியமற்றவராக உணர வைக்கிறது.

வேறொருவர் மீது ஈர்ப்பு

இது துரோகம் அல்லது ஏமாற்றுதல் அல்ல, ஆனால் பெரும்பாலும் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் சிலசமயம் மோசமான காதலில் இருக்கும்போது மற்றொரு நபர் அவர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்கும்போது அவர்கள் மற்றொரு நபரிடம் ஈரக்கப்படுகிறார்கள்.

பெற்றோருக்கு பிடிக்காமல் இருப்பது

தங்கள் பெற்றோருக்கும், காதலனுக்கும் இடையில் நசுக்கப்படுவதை பெண்கள் விரும்புவதில்லை. பல பெண்கள் தங்கள் பெற்றோரின் தொடர்ச்சியான நச்சரிப்பைக் கையாள முடியாததால் காதலை முறித்துக் கொள்கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker