உங்க அக்குள் பகுதி கருப்பா இருக்கா? துர்நாற்றம் வீசுதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்…!
நம் உடலில் ஒவ்வொரு பகுதியும் மிகவும் முக்கியம். அவற்றை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது அவசியம். உங்கள் முகம் மற்றும் தலைமுடியை போலவே, உங்கள் அக்குள் பகுதியையும் நீங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும், உங்க அக்குள் பகுதியை நினைத்து நீங்கள் கவலை அடைகிறீர்களா? காரணம் கருமையான அக்குள் பகுதி மற்றும் துர்நாற்றம். மரபியல் போன்ற பல்வேறு காரணங்கள் அக்குள் நிறமியும் உங்களுக்கு ஏற்படலாம். உடல் பருமன், அலுமினியம் மற்றும் கடுமையான இரசாயனங்கள் கொண்ட டியோடரண்டுகளின் பயன்பாடு, ஷேவிங்கினால் ஏற்படும் சிராய்ப்பு அல்லது தோல் உரித்தல், இறந்த சரும செல்கள் குவிவதற்கு காரணமாகிறது.
அக்குள் கருமையாக இருப்பது என்பது பலருக்கு பொதுவான கவலை. அக்குள் நிறமியை எதிர்ப்பதற்கான சில எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பழங்கள் மற்றும் கீரைகளைச் சேர்க்கவும் உங்கள் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும்.அதனால், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் முழுவதுமாக சேர்த்துக்கொள்ளுங்கள். தானியங்கள், மற்றும் புரதங்கள் அக்குள் பகுதியில் நிறமியை தடுக்கும்.
ஹாட்-வாக்சிங் செய்வதைத் தவிர்க்கவும் சூடான மெழுகு, முடி அகற்றும் கிரீம்கள் மற்றும் அக்குள்களுக்கு த்ரெடிங் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மெழுகு செயல்முறை தோலின் மெல்லிய அடுக்கை நீக்குகிறது. இது தொற்று மற்றும் எரிச்சலை உங்களுக்கு ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு, அடிக்கடி இவ்வாறு செய்வது உங்கள் தோல் அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து கருமையாக மாறும். சிறந்த முடிவுகளுக்கு ஷேவிங் அல்லது லேசர் முடி குறைப்பு முறைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
இரசாயன தயாரிப்புகளை தவிர்க்கவும் அக்குள் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவது, நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். இது எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். பாரபென்ஸ், ட்ரைக்ளோசன் போன்ற பல்வேறு எரிச்சலூட்டும் பொருட்கள் இரசாயன தயாரிப்புகளில் இருக்கலாம். அலுமினியம் டியோடரண்டுகளில் காணப்படுகிறது. இது தோல் எரிச்சல், தடித்தல், வீக்கம் மற்றும் கருமையை ஏற்படுத்தும். ஆதலால், பாதுகாப்பான பொருட்களைக் கொண்ட இயற்கையான பயன்பாடுகளை உபயோகப்படுத்த வேண்டும். இது அக்குள்களுக்கு ஊட்டமளித்து ஈரப்பதமூட்டுவதுடன் வீக்கமடைந்த சருமத்தையும் ஆற்றும்.
கிளைகோலிக் அமிலம் கிளைகோலிக் அமிலம் அக்குள் நிறமிக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உயர்ந்த தோல் உரித்தல் மூலம், அதை நீக்குகிறது. பாக்டீரியா உங்கள் வியர்வையை உடைத்து, துர்நாற்றத்தை நீக்குகிறது. வாரத்திற்கு ஒருமுறை, இதை செய்யலாம். உங்கள் அக்குள்களை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். ஒரு புதிய தயாரிப்பை முயற்சிப்பது எப்போதும் பேட்ச் சோதனையுடன் தொடங்க வேண்டும். சிறிய அளவை முதலில் பயன்படுத்துங்கள். இதில் சிவத்தல், எரிச்சல், அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
தொடர்ந்து சுத்தம் செய்யவும் முகத்தைப் போலவே, அக்குள்களும் தோலின் உணர்திறன் மற்றும் எரிச்சலால் பாதிக்கப்படலாம். அக்குள் பகுதி தோலின் மடிப்பு, காற்றோட்டம் இல்லாததால் ஈரப்பதமாக இருக்கும். இது ஒரு பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இனப்பெருக்கம் செய்யும் இடம். வாரத்திற்கு இரண்டு முறை தோல் உரித்தல் முறை செய்வது இறந்த செல்களை அகற்ற உதவும். இந்த மென்மையான பகுதியில் கடினத்தன்மை மற்றும் வறட்சியை நீக்க வேண்டும். இது அதிகப்படியான வியர்வையையும் கட்டுப்படுத்தும். இதனால், நீடித்த புத்துணர்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது.