ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

அளவுக்கு அதிகமா சாப்பிட்டு இம்சை படுறீங்களா? இத ஒரு டம்ளர் குடிங்க உடனே சரியாயிடும்…

பண்டிகை காலங்கள் வந்தாலே நாம் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விரும்பியதை சாப்பிட்டு விடுவோம். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது, பலகாரங்கள் மட்டுமின்றி, அசைவ உணவுகளையும் ஒரு கட்டு கட்டுவோர் ஏராளம். அப்படி நீங்கள் தீபாவளி அன்று வயிறு நிறைய உணவை உண்டு, அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அப்பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு எளிதில் சரிசெய்துவிடலாம்.

நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலத்தில் சுரக்கும் அமிலத்தால் உடைக்கப்பட்டு செரிக்கப்படுகின்றன. ஆனால் அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, அது வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், அதிகப்படியான ஏப்பம் மற்றும் மிகுந்த சோம்பலை உண்டாக்கும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றல், உணவை செரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்து, கல்லீரலின் இன்சுலின் உற்பத்தி திறனை பாதித்து, சர்க்கரை நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

மேலும் அளவுக்கு அதிகமாக உண்பது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பிம்பிளுக்கு வழிவகுக்கும். எனவே இப்பிரச்சனைகளைத் தவிர்த்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

மூலிகை டீ

மூலிகை டீக்களான சீமைச்சாமந்தி டீ, க்ரீன் டீ மற்றும் புதினா டீ போன்றவை உண்ட உணவு செரிமான பாதையில் எளிதில் நகரச் செய்து, அதிகப்படியான உணவால் சந்திக்கும் வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மஞ்சள் டீ

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள், செரிமானத்தை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. ஆகவே நீங்கள் செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் போது, சற்றும் யோசிக்காமல் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, உணவு உண்ட பின் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

காரமான எலுமிச்சை ஜூஸ்

ஒருவர் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு டம்ளர் சுடுநீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, அதில் மிளகுத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானம் வயிற்று வலி, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.

ப்ளாக் காபி

ப்ளாக் காபி ஒரு மலமிளக்கியாக செயல்படலாம் மற்றும் உங்கள் குடலில் உள்ளவற்றை வேகமாக நகரச் செய்யலாம். இருப்பினும், அளவுக்கு அதிகமான காபி வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும் மற்றும் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். அதோடு அதிகப்படியான காபி தூக்கத்திற்கும் இடையூறை விளைவிக்கலாம். எனவே மாலை 3 மணிக்கு பிறகு காபி குடிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகரில் செரிமானத்திற்கு உதவும் ஆரோக்கியமான புரோபயோடிக்குகள் உள்ளன மற்றும் குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது.

சோம்பு டீ

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிறு உப்புசத்தால் கஷ்டப்படும் போது, சோம்பு விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை சூடாக குடியுங்கள். இதனால் வயிற்று உப்புச பிரச்சனை மட்டுமின்றி, அஜீரண கோளாறு நீங்கி, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker