உதடுகளின் மேல் இருக்கும் முடியை அகற்ற போராடும் பெண்களுக்கு உதவும் எளிமையான வீட்டு வைத்தியம்
உதடுகளின் மேல் இருக்கும் முடியை அகற்ற போராடும் பெண்களுக்கு உதவும் எளிமையான வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.
இப்போதெல்லாம் பெண்களுக்கு மேல் உதடுகளில் முடி இருப்பது சாதாரணமாகிவிட்டது. மன அழுத்தம், மோசமான உணவுகள் மற்றும் சில ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த முடி வளர்ச்சி ஏற்படலாம். இந்த தேவையற்ற முடியை நீக்க சில இயற்கை வழிகள் நமக்கு உதவுகிறது.
பெண்களுக்கு ஆண்களைப் போல ஏற்படும் முடி வளர்ச்சிக்கு மரபணு அல்லது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக 5-10% பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. மேல் உதட்டில் உள்ள முடியை அகற்ற சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகள் என்னென்ன எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க மஞ்சள் மற்றும் பால்
மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் உள்ளது. இது பெண்களின் முடி வளர்ச்சியை குறைப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி பயன்படுத்துவது
தேவையான பொருட்கள் :
மஞ்சள் – 1 தேக்கரண்டி
பால் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அதிக குழைவில்லாமல் மேல் உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு முடி வளரும் திசைக்கு எதிர்திசையில் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்.
எச்சரிக்கை :பால் ஒவ்வாமை இருப்பவர்கள் பாலை பயன்படுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் ஜெலட்டின் போன்ற அமைப்பு உள்ளது. இது முகத்தில் உள்ள முடிகளை நீக்க உதவுகிறது. இந்த செயல்முறை எளிதில் உடையக் கூடிய முடிகளை அகற்ற உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது
தேவையான பொருட்கள் :
முட்டையின் வெள்ளைக்கரு – 1
மக்காச்சோள மாவு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக்கருவை மக்காச்சோள மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முடி யுள்ள இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு அதை உரித்து எடுங்கள்.இதை வாரத்திற்கு 2 முறை செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
ஜெலட்டின்
ஜெலட்டின் பசை போன்று செயல்படுவதால் தேவையற்ற முடிகளை வேர்களில் இருந்து நீக்க உதவுகிறது.
ஜெலட்டின் – 1 தேக்கரண்டி
11/2 தேக்கரண்டி – பால்
ஒரு கிண்ணத்தில் ஜெலட்டின் மற்றும் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் மைக்ரோ வேவ் ஓவனில் வையுங்கள். சூடான இந்த பேஸ்ட்டை மேல் உதட்டில் தடவ வேண்டும். காய்ந்த பிறகு அதை மெதுவாக உரித்து எடுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதைச் செய்து வருவது நல்லது.
சர்க்கரை
:
மேல் உதட்டின் மேல் உள்ள முடிகளை நீக்க சர்க்கரை பயன்படுகிறது. இது தேவையற்ற முடிகளை அகற்றுவதோடு, முடி வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக வைக்கவும் உதவுகிறது.
தேவைப்படும் பொருட்கள் :
சர்க்கரை – 2 தேக்கரண்டி
லெமன் சாறு – 1 தேக்கரண்டி
மென்மையான துணி – 1
ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து ஒரு நிமிடம் வரை சூடாக்க வேண்டும். அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். கலவை நன்றாக கெட்டியாகும் வரை கிளறி வேண்டும். பிறகு ஆறியதும் இந்த கலவையை மேல் உதட்டின் மேல் தடவி வர வேண்டும். பிறகு ஒரு துணியை அதன் மேல் வைத்து வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். முடி வளர்ச்சியின் திசைக்கு எதிராக இழுக்க வேண்டும். கொஞ்சம் வலியும் இருக்கும் என்பதால் கவனமாக செய்ய வேண்டும்.
தயிர், தேன் மற்றும் மஞ்சள்
தயிர், தேன் மற்றும் மஞ்சள் கலந்த கலவை மேல் உதட்டின் மேலிருக்கும் தேவையற்ற முடியை நீக்க உதவுகிறது. இது ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது.
தேவைப்படும் பொருட்கள் :
தேன் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
ஒரு பாத்திரத்தில் தேன், தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மேல் உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 15-20 நிமிடங்கள் வரை காத்திருந்து பின்பு தேய்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள்.
இந்த சிகிச்சை முறைகள் எல்லாமே பாதுகாப்பானவை. பக்கவிளைவுகள் இல்லாதவை என்றாலும் மென்மையான சருமமாக இருந்தால் சருமம் பாதிக்க வாய்ப்புண்டு. முடியை நிரந்தரமாக வெளியேற்ற விரும்பினால் நிபுணரிடம ஆலோசனை பெறுவது அவசியம்.