சமையல் குறிப்புகள்புதியவை
எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :
- புளி கரைச்சல் – 2 மேசைக்கரண்டி
- தக்காளி- 1
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
- பூண்டு – 6 பல்
- காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
- சீரகம் – 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – சுவைக்க
- மஞ்சள் – அரை தேக்கரண்டி
- கடுகு- 1 தேக்கரண்டி
- எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை :
- கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..
- 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.
- அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.
- கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.
- தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.
- இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.
- சுவையான மிளகு ரசத்தை சூப் ஆகவோ, சதத்துடனோ சாப்பிடலாம்.