புதியவைவீடு-தோட்டம்
குளித்து முடித்ததும் வியர்க்கிறதா? அடுத்த நொடி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
குளித்து முடித்ததும் வியர்க்கிறதா? அடுத்த நொடி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
குளித்து முடித்ததும் உடலில் வியர்வையை உணர்ந்து இருப்பீர்கள்.
அதற்கு இன்று வரை பலருக்கு காரணமும் தெரியாது, தீர்வையும் கண்டுப்பிடித்திருக்க மாட்டார்கள்.
குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வியர்வையை தடுக்க என்ன செய்யலாம்?
- சுடுநீரில் குளியலை முடித்த பின்னர், இறுதியில் ஒரு கப் குளிர்ந்த நீரால் உடலை அலசுங்கள். இதனால் உடல் வெப்பநிலை குறைந்து, குளித்த பின் ஏற்படும் வியர்வையைக் குறைக்கலாம்.
- சுடுநீர் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பையும் சூடேற்றும். எனவே தலைக்கு எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும்.
- குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசிய பின்னர் மிகுந்த புத்துணர்ச்சியை உணரலாம். அதோடு, தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்த உடனே ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- சிலர் மணிக்கணக்கில் குளியலறையில் நேரத்தை செலவழிப்பார்கள். குளித்த பின்னர் வியர்ப்பதற்கு குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதும் ஓர் காரணம்.
- குளித்து முடித்த பின்னர் டவல் கொண்டு உடலை தேய்த்து துடைத்தால், அந்த உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து, வியர்க்க வைக்கும். எனவே எப்போதும் குளித்து முடித்த பின் டவல் கொண்டு ஒத்தி எடுங்கள்.
- குளித்து முடித்ததும் படுக்கை அறைக்கு வந்து உடையை மாற்றும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.