ஆரோக்கியம்புதியவை

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

சூடான உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

1. ஹார்மோன் வளர்ச்சியை சீர்குலைக்கும்:

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

2. சிறுநீரக கற்கள்:

பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமித்துவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை சூழ்ந்திருக்கும் வெப்பநிலை உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

3. மார்பக புற்றுநோய்:

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.

4. கல்லீரல் புற்றுநோய்:

நோய் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு ரசாயன பொருள், பித்தலேட்ஸ். இது சாக்லெட்டுகள், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் வெளிப்புற கவர்கள் (ரேப்பர்கள்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பொருளுடன் வினை புரிந்து கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும். ஆண்களின் ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.

5. நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில் பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker