2022 குரு பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது… உங்க ராசி இதுல இருக்கா?
2022 குரு பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
கன்னி
2022 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இந்த ராசிக்காரர்கள் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பள உயர்வைப் பெறுவார்கள். பணியிடத்தில் வெற்றியைக் காண்பார்கள். இது நிதி நிலைமையை மேம்படுத்தும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
2022 ஆம் ஆண்டில் குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்வது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை அளிக்கும். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டில் நேர்மறையான முடிவுகளைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணம் அதிகம் சேரும். இது உங்களின் வங்கி இருப்பை கணிசமாக அதிகரிக்கும்.
தனுசு
2022-ல் குரு பகவான் மீன ராசிக்கு செல்வதால், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். கடந்த ஆண்டில் சந்தித்த சவால்கள் முடிவுக்கு வரும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான பல பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்வது உங்களின் மூலதனத்தை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
கும்பம்
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதோடு, அதில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இந்த ஆண்டின் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.