அழகு..அழகு..புதியவை
வெங்காயத் தோலை குப்பையில் போடுபவரா நீங்கள்? அழகில் ஜொலிக்க பயன்படுமாம்
வெங்காயத் தோலை குப்பையில் போடுபவரா நீங்கள்? அழகில் ஜொலிக்க பயன்படுமாம்
உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் வெங்காயம். ஆனால் அதன் தோலை நாம் அநேக நேரங்களில் குப்பையில் தூக்கி வீசுகிறோம். ஆனால் அந்த தோலை குப்பையில் வீசாமல் முகம் மற்றும் முடியின் அழகினை அதிகரிக்கலாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்துடன் நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்க உதவுகின்றன. வெங்காயத் தோலை பயன்படுத்தி வியக்கத்தக்க பல நன்மைகளை நாம் அடைய முடியும்.
- வெங்காய தோலில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க வெங்காய தோலைப் பயன்படுத்தலாம். பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வெங்காய தோலில் காணப்படுகின்றன.
- வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை சளிகளுக்கு நிரந்தர தீர்வு தரும்.
- உங்கள் தலைமுடி வறண்டு, வளரவில்லை என்றால் வெங்காயத் தோலின் சாற்றை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு, வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்து, பின்பு தடவிய பின்பு ஷாம்பு போட்டு தண்ணீரால் முடியை கழுவவும். இது பொடுகு பிரச்சனையையும் நீக்குகிறது.
- வெங்காய சாற்றை மஞ்சளில் கலந்து முகத்தில் தடவவும். இதைச் செய்வதன் மூலம், முகத்தின் புள்ளிகள் அகற்றப்படுவதுடன், முகம் பிரகாசமாகவும், பளபளப்புடனும் இருக்கின்றது.