பெரும்பாலான காதல் திருமணங்கள் வெவ்வேறு குடும்ப பின்னணி, சமூகம், மதம், பழக்க வழக்கம் என்று வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்திருக்கும்.
திருமணம் எவ்வளவு பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக நடந்தாலும் சரி, எளிமையாக நடந்தாலும் திருமணம் ஜோடிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்கிறார்கள் என்பதுதான் திருமணத்தின் வெற்றியைக் குறிக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் மற்றும் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பல்வேறு காரணங்களின் அடிப்படையில், காதல் திருமணங்கள் வெற்றி அடைகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை : பெரும்பாலான காதல் திருமணங்கள் வெவ்வேறு குடும்ப பின்னணி, சமூகம், மதம், பழக்க வழக்கம் என்று வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உணவு பழக்கம் முதல் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் எல்லாமே வேறு வேறாக காணப்படும். புதிய கலாச்சாரம் மற்றும் பழக்கங்களை தெரிந்து கொண்டு அதில் பங்கெடுத்துக் கொள்வது வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றும்.
பெற்றோர்கள் ஈடுபாடு குறைவு : காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டாலும் பெற்றோர்கள் அவர்களின் வாழ்வில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவதில்லை. பெற்றோர்களின் தலையீடு குறைந்த அளவிலேயே இருக்கும். இதனால் பல விதமான சிறிய பிரச்சனைகளும் வாதங்களும் தவிர்க்கப்படும்.
விட்டுக்கொடுப்பது : ஒருவரை நீண்ட நாட்களாக தெரியும் போதும், பல காலம் பழகிய அடிப்படையிலும், அவருடன் எளிதாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு, பெரிதாக சண்டைகள் ஏதுமின்றி விட்டுக்கொடுத்து செல்ல முடியும். காதல் தம்பதிகள் தங்களுக்குள் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற முனைப்பு காதல் திருமணம் செய்தவர்களிடம் அதிகமாக காணப்படும்.
எதிர்மறை குணங்களை முன்கூட்டியே புரிந்து கொள்ளுதல் : காதலிக்கும் நேரத்தில் நேர்மறையான குணங்கள் மட்டுமே வெளிப்படுத்தும் காதலர்கள், ஒருகட்டத்தில் எதிர்மறையான குணங்கள் இயல்பாக வெளிப்பட்டுவடும். எனவே திருமணத்திற்கு முன்பே ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். எதிர்மறை குணங்களை அறிந்து கொள்வதால் திருமணத்துக்கு முன்பே தம்பதிகளுக்கு இடையே உள்ள புரிதல் அவர்களின் திருமண வாழ்க்கையை மேம்படுத்தும்.
தேவையில்லாத விஷயத்தில் தலையீடு இல்லை : காதல் தம்பதிகளுக்கு எது பிடிக்கும் மற்றும் எது பிடிக்காது என்பது என்பது தெரிந்திருப்பதால் தேவையில்லாத விஷயத்தில் தலையிட மாட்டார்கள். அதுமட்டுமின்றி இருவருக்கும் போதிய அளவு தாங்கள் விரும்புவதை செய்யக்கடிய சுதந்திரம் இருக்கும்.
பரஸ்பர மரியாதை : எந்த உறவும் நீண்ட காலம் நல்ல பிணைப்போடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அந்த உறவுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருக்க வேண்டும். காதல் தம்பதிகளை நிச்சயிக்கப்பட்ட திருமண தம்பதிகளுடன் ஒப்பிடும்பொழுது, நீண்ட காலம் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து வைத்துள்ளார் எனவே இருவருக்கு இடையே பரஸ்பர மரியாதை இருக்கும்.
நெருக்கம் மற்றும் பாலியல் உறவு : நிச்சயக்கப்பட்ட திருமணங்களில கணவனும் மனைவியும் நன்றாக புரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் தேவைப்படும். எனவே அவர்களுக்குள் நெருக்கம் உருவாவதற்கும், சுமுகமான பாலியல் உறவும் ஏற்பட தாமதமாகும். ஆனால் காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கிடையே ஏற்கனவே நெருக்கமும் பிணைப்பும் இருப்பதால் இவர்களின் உறவு சுமுகமாக இருக்கும்.