இந்த 9 இடத்துல எதாவது ஒரு இடத்தில உங்களுக்கு மச்சம் இருந்தாலும் நீங்க அதிர்ஷடாலிங்க…
இந்த 9 இடத்துல எதாவது ஒரு இடத்தில உங்களுக்கு மச்சம் இருந்தாலும் நீங்க அதிர்ஷடாலிங்க...
பொதுவாக நாம் பிறக்கும் போதிலிருந்து நம் கூடவே வருவதில் மச்சங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மச்சங்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்திலயோ அல்லது பழுப்பு நிறத்திலயோ தோலின் மீது காணப்படும். இந்த மச்சங்கள் அழகை கொடுப்பதோடு நமக்கு ஓர் அடையாளமாகவும் திகழ்கிறது. காரணம் இது மாறாமல் அப்படியே இருப்பது தான். அதிலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி மச்சங்கள் இருக்கும் இடத்தை பொருத்து அதிர்ஷடங்கள் வரும் என்கிறார்கள். பெண்களுக்கு மேனியில் இருக்கும் மச்சங்கள் அவர்களின் சாமுத்திரிகா லட்சணத்தையும் பறைசாற்றுகிறது.
நெற்றியில் மச்சம்
சில பேருக்கு வலது பக்க நெற்றியில் மச்சம் காணப்படும். அப்படி இருப்பவர்களுக்கு வயதான காலத்தில் நிறைய பணம் தேடி வருமாம். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உலகத்தை சுற்றி வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இடது பக்க நெற்றி
இதுவே இடது பக்க நெற்றியில் மச்சம் இருந்தால் உங்களிடம் செல்வங்கள் இருக்கும் ஆனால் யாருக்கும் நயா பைசாக் கூடத் தராதவர்களாக இருப்பீர்களாம். செல்வந்தர்களாக இருப்பீர்கள், ஆனால் எச்சி கையில் ஈ ஓட்ட மாட்டீர்கள்.
புருவங்களின் மத்தியில் மச்சம் இருப்பதே ஒரு அழகு தான். இப்படி இரண்டு புருவங்களுக்கிடையே மச்சம் இருப்பவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வதோடு 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வார்களாம். மேலும் திருமணம் ஆன பிறகு அவர்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று கூறுகிறார்கள்.
கண் இமைகள்
உங்கள் இரண்டு கண் இமைகளில் ஏதோ ஒன்றில் குறிப்பாக வலதுபக்க கண் இமைகளில் மச்சம் காணப்பட்டால் நீங்கள் சினமா ஸ்டார் மாதிரி பிரபலமாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பணக்காராகவும் இருப்பீர்கள். இதுவே கீழ் இமைகளின் உட்புற ப் பகுதியில் மச்சம் காணப்பட்டால் நீங்கள் ஒரு செலவாளி. எவ்வளவு பணம் வந்தாலும் சேர்த்து வைக்க கஷ்டப்படுவீர்கள்.
நெஞ்சில் மச்சம் காணப்படுபவர்கள் உண்மையில் அதிர்ஷடசாலியாம். இவர்களுக்கு எப்போதுமே இலக்கு முக்கியம். தங்கள் லட்சிய பாதையை நோக்கி பயணிப்பவர்களாக இருப்பார்களாம். நீங்க மட்டும் சரியாக திட்டமிட்டால் எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.
காது மடல்கள்
காதுகளின் வெளிப்புற மடல்களில் அல்லது உட்புற பகுதியில் மச்சம் காணப்பட்டால் ஆடம்பரமாக செலவழிக்கும் பேர் வழியாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்குவீர்களாம். எனவே நீங்கள் மச்சக்காரணாக இருக்கனும் என்றால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக புழைக்க வேண்டியது இருக்கும்.
உங்களுக்கு மேல் உதட்டின் வெளிப்புறத்தில் மச்சம் இருந்தால் அது அழகான மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. இதுவே கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் காணப்பட்டால் உங்களுக்கு சூதாட்ட எண்ணம் அதிகமாக இருக்கும்.
தோள்பட்டை
வலது தோள்பட்டையில் மச்சம் காணப்படுபவர்கள் பணத்தை திட்டமிட்டு செலவழிப்பார்களாம். புத்திசாலித்தனமாக எதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்களாம். உண்மையில் இந்த மச்ச அதிர்ஷ்டம் உங்களுக்கு வெற்றியை தேடித் தரும்.
வலது உள்ளங்கை
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் பணக்கார வாழ்க்கையை சுட்டிக் காட்டுகிறது. மேலும் இவர்கள் தொட்டது எல்லாம் வெற்றி தானாம். உதட்டின் அருகில் உதட்டுக்கு அருகில் அல்லது உதட்டின் மேற்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் வங்கி கணக்கில் வல்லியதோர் பேலன்ஸ் மெயின்டெய்ன் பண்ற ஆளாக இருப்பார்களாம். என்னங்க உங்க அதிர்ஷ்டம் என்னென்னு தெரிஞ்சுகிட்டீங்களா.