நீங்கள் தூங்கும் நிலையை வைத்தே உங்கள் குணத்தை கணிக்க முடியும்
நீங்கள் தூங்கும் நிலையை வைத்தே உங்கள் குணத்தை கணிக்க முடியும்
நாம் ஆழ்ந்து தூங்கும்போது எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதே தெரியாது. அதேபோல் நமக்கென சில படுக்கும் நிலைகள் இருக்கும். அப்படி படுத்தால் மட்டும்தான் தூக்கம் வரும். அதுவும் நம் வீட்டில் நம் மெத்தையில் நாம் நினைத்தபடி தூங்கினால்தான் நிம்மதியான தூக்கம் வரும். வெளியிடங்களில் தூங்கும்போது அட்டென்ஷன் பொசிஷனில்தான் தூங்க வேண்டும். இதற்காகவே நாம் வெளியிடங்களில் தூங்குவதை தவிர்த்துவிடுவோம். ஏன் அந்த நிலையில் தூங்க விரும்புகிறீர்கள் தெரியுமா? அதற்கு உங்கள் குணமே காரணம். இதை நாங்கள் சொல்லவில்லை ஆய்வுகள் சொல்கின்றன.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்லீப் அஸஸ்மெண்ட் அண்ட் அட்வைசரி சர்வீஸ், பெரும்பாலும் பலரும் தூங்கும் நிலை மற்றும் அவர்களுடைய குணம் இரண்டையும் வைத்து ஆய்வு செய்ததில் பலருக்கும் அது ஒத்துப் போயின. அதை அறிக்கையாகவும் வெளியிட்டது. அவை உங்களோடும் ஒத்துப் போகிறதா என்பதை நீங்கள் செக் செய்யுங்கள்.
கருவில் இருக்கும் நிலை : சிலர் கால்களை மார்பு பகுதிவரை மடித்து கைகளை குறுக்கிக் கொண்டு கிட்டதட்ட அம்மாவின் கருவில் குழந்தை இருக்கும் நிலையில் படுப்பார்கள். இந்த நிலையில் 41 சதவீதம் பேர் தூங்க விரும்புகிறார்கள் என்கிறது ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள்தான் அதிகம் என்கிறது. இப்படி தூங்குவோர் தனக்கு நேரும் எந்த சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு தைரியமாக எதிர்கொள்வார்கள். வெளியே பார்ப்பதற்கு கரடுமுரடாகவும் உள்ளுக்குள் மிகுந்த மென்மை குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். முதல்முறை ஒருவரை சந்திக்கும் போது அவ்வளவாக பேச மாட்டார்கள். பழகியபின் அவரைப் போல் யாரும் அவருடன் பேசியிருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பழகிவிடுவார். அவரைப் பற்றி கணிப்பதே மிகவும் கடினம்.
ஒருபக்கமாக திரும்பிய அட்டென்ஷன் நிலை : ஒருபக்கமாகத் திரும்பிய படி கை கால்களை நேராக வைத்து உறங்குவார்கள். இவர்கள் மற்றவர்களுடன் மிக அன்பாகப் பழகுவார். இவரின் வருகையைப் பலரும் எதிர்பார்பார்கள். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். இவர் மீது மற்றவர்களுக்கு அளவுகடந்த நம்பிக்கைகள் இருக்கும். எல்லொருடனும் சகஜமாக பழகுவார்கள்.
ஒரு பக்கமாக திரும்பிக் கைகளை நீட்டிய நிலை : கால்கள் நேராகவும் கைகளை மட்டும் நீட்டியவாறு நேராக வைத்து உறங்குவீர்கள். இப்படி தூங்குவோர் எப்போது கொஞ்சம் குழப்ப நிலையிலேயே இருப்பார்கள். எல்லோருடனும் வெளிப்படையாகப் பழகுவார்கள். இருப்பினும் அவர்களிடம் குறைகளைக் கண்டறிவார்கள். முடிவுகள் எடுக்கும்போது நிதானமாகவே எடுப்பார்கள். ஆனால் அதில் உறுதியாக இருப்பார்கள். யார் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
நேராக தூங்கும் நிலை : அப்படி இப்படி திரும்பாமல் விட்டத்தைப் பார்த்தபடி நேராகப்படுத்தால்தான் இவர்கள் தூங்குவார்கள். இதில் வெறும் 8 சதவீதம் பேர்தான் இந்த நிலையில் தூங்க விரும்புகிறார்கள். இவர்கள் தூங்கும் நிலைபோன்றே மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக இருப்பார்கள். மற்றவர்களிடம் மனம் விட்டு பரந்த மனதுடன் பேச மாட்டார்கள். அவர்களைப் போலவே மற்றவர்களும் விதிமுறைகளை பின்பற்றுபவர்களாக ஒழுக்க நெறிகளுடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகிவிட மாட்டார்கள். குறைந்த புன்னகை , அளவான பேச்சு என்றுதான் இருப்பார்கள்.
முற்றிலும் திரும்பிப் படுத்தல் நிலை : பலருக்கும் இப்படிப் படுத்தால் சவுகரியமாக இருக்காது. ஆனால் சிலர் இப்படித் தூங்குவதைதான் விரும்பி நிம்மதியாக தூங்குவார்கள். உடலை பின் புறமாக திருப்பி கழுத்தை ஒருபக்கமாக திருப்பியவாறு கைகளை ரக்கை போல் தலையனை மேல் விரித்தபடி தூங்குவார்கள். இவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவராக வெளியே இருப்பார்கள். ஆனால் அவர்கள் மீது போடப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும், நடக்கும் விஷயங்களை சரியாக உள்வாங்கும் திறன் இல்லாமல் உடனடியாக அந்த சூழ்நிலைக்கு எதிர்வினையாற்றிவிடுவார்கள். நிதானம் இருக்காது.
நிமிர்ந்தபடி கைகளை ரக்கைகள் போல் விரித்த நிலை : நிமிர்ந்து படுக்கும் இவர்கள் கைகளை தலைக்கு மேல் கைகளை தூக்கியவாறு விரித்துத் தூங்குவார்கள். இவர்கள் மற்றவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதலாக உடன் இருப்பார்கள். நண்பர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது எப்போதும் செய்யத் தயாராக இருப்பார்கள். உறவுகளுக்கு முக்கியதுவம் தருவார்கள். எப்போதும் தான் கவனிக்கப்பட வேண்டும் என நினைக்க மாட்டார்கள். அவர்களின் செயல்களும் அப்படி இருக்காது.