புதியவைவீடு-தோட்டம்

வீணாக கீழே போடும் டீ பேக்குகளை வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்…

வீணாக கீழே போடும் டீ பேக்குகளை வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்...

நாம் தினந்தோறும் பயன்படுத்தும் டீ பேக்குகளை இனி வீணாக கீழே போடாமல் சேர்த்து வைத்து காலணிகளில் உள்ள துர்நாற்றம் நீங்க, தாவரங்கள் வளர, பாத்திரங்களை சுத்தப்படுத்த போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தி வரலாம். இன்னும் இந்த டீ பேக்குகளைக் கொண்டு எந்தெந்த விஷயங்களை செய்யலாம் என அறிவோம்.பொதுவாக நம் அனைவருக்கும் தேநீர் என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். ஆனால் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை வீணாக கீழே தான் போடுகிறோம். ஆனால் பயன்படுத்திய டீ பேக்குகளைக் கொண்டு கூட உங்க வீட்டில் சில அற்புதமான விஷயங்களை செய்யலாம்.

பாத்திரங்களை சுத்தப்படுத்துதல்

தேநீர் பேக்குகள் ஒரு கிருமிநாசினி விளைவைக் கொண்டுள்ளது. எனவே இனி நீங்கள் சமையல் பாத்திரங்களை கழுவும் போது இதை பயன்படுத்தி கொள்ளலாம்.டீத்தூள் உதவியுடன் பாத்திரங்களை கழுவது உங்க பாத்திரங்கள் பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருக்க உதவி செய்யும். அழுக்கு பாத்திரங்களை தண்ணீரில் ஊற வைத்து அதில் 3 டீ பேக்குகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.காலையில் எழுந்து பாத்திரங்களை கழுவும் போது பாத்திரங்களில் உள்ள அனைத்து அழுக்குகளும் அகற்றப்பட்டு இருக்கும். பாத்திரங்களை சுத்தம் செய்ய நீங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டியதில்லை.

அரிசி சாதம்

வீட்டில் அரிசி சாதம் சமைக்கும் போது கூடுதல் சுவையைப் பெற நீங்கள் டீ பேக்குகளை பயன்படுத்தலாம். அரிசியை வேகவைக்கும் போது அதில் தேநீர் பேக்குகளை சேர்த்து கொதிக்க விடுங்கள். இது உங்களுக்கு நல்ல சுவையைத் தரும். நறுமண டீ தூள்கள் சாதத்துடன் சமைக்கும் போது நல்ல சுவையை தரும்.

​தாவரங்கள் வளர்ப்பு

சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்களில் பூச்சி அரிப்பு மற்றும் பூஞ்சை பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவிர்க்க தண்ணீரில் கொதிக்க வைத்த டீ பேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் இதைப் போக்கலாம். தேயிலை தண்ணீரை குளிர்வித்து அதை உட்புற செடிகளுக்கு ஊற்றி பயன்படுத்தி வரலாம்.

​வாசனை

எனவே வீட்டில் குப்பை தொட்டியை வைக்கும் இடங்களில் துர்நாற்றம் வீசினால் அங்கே டீ பேக்குகளை வைக்கலாம். அங்குள்ள துர்நாற்றம் உறிஞ்சப்பட்டு சுற்றுப்புறத்தில் புதிய வாசனை பிறக்கும்.

குளியல்

பயன்படுத்திய டீ பேக்குகளை நீங்கள் குளிக்கும் நீரில் போட்டு பயன்படுத்தலாம். தேநீரில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்திற்கும் நல்லது. அப்படி குளிக்கும் தண்ணீருக்குள் ஏற்கனவே பயன்படுத்திய டீ பேக்கை போட்டு வைத்துக் குளிப்பது, மனதிற்கு அமைதியைத் தரும்.
குறிப்பாக கெமோமில் அல்லது மல்லிகை நறுமணம் கொண்ட தேநீர் பேக்குகள் இன்னும் நல்ல வாசனையை கொடுக்கும். இது நம்முடைய மனதையும் ரிலாக்ஸ் ஆக்கும்.

​பூச்சிக்கடி

நாம் ஏற்கனவே பயன்படுத்திய தேநீர் பைகளை பூச்சிக்கடிக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். எதாவது தேனீ, குளவி போன்ற பூச்சிகள் கடித்தால், அவற்றின் கொடுக்கு தோலுக்குள் சிக்கிக் கொண்டாலோ, அந்த இடத்தில் ஏற்கனவே பயன்படுத்திய, ஆறவைத்த குளிர்ந்த தேநீர் பேக்கை வையுங்கள்.
இது பாதிக்கப்பட்ட இடத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலை குறைக்க உதவுகிறது.

கூந்தல் ஆரோக்கியம்

உங்களுடைய கூந்தலில் எண்ணெய் பிசுக்கு இருந்தால் அதை நீக்க ஏற்கனவே பயன்படுத்திய டீ பேக்குகள் உதவுகின்றன. டீ பேக்குகளை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
நம்முடைய தலைமுடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு தேயிலை தண்ணீரை கொண்டு கூந்தலை அலசுங்கள். இது கூந்தலை பளபளப்பாக வைத்திருப்பதோடு மட்டுமின்றி, கூந்தலுக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும்

கால் மிதியடிகள்

சில நேரங்களில் நாம் வீட்டில் பயன்படுத்தும் கால் மிதியடிகளில் கெட்ட துர்நாற்றம் ஏற்படும். இதற்கு தேநீர் பேக்குகளின் உள்ளே உள்ள தேயிலை தூளை கால் மிதியடிகளில் தூவி பயன்படுத்த வேண்டும்.

​காலணிகள்

மழைக்காலங்களில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தால், நாம் பயன்படுத்தும் ஷூக்களில் இருந்து துர்நாற்றம் வீசும். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் காலணிகளில் இருந்து கூட கெட்ட துர்நாற்றம் வீசும். எனவே உங்க காலணிகளுக்குள் பயன்படுத்திய டீ பேக்குகளை வைப்பதன் மூலம் கூட கெட்ட துர்நாற்றத்தை போக்க முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker