முதுகுத்தண்டு, முதுகுத் தசைகளை பலப்படுத்தும் ஆசனம்
முதுகுத்தண்டு, முதுகுத் தசைகளை பலப்படுத்தும் ஆசனம்
பின்பு குதிகால் மீது படத்தில் உள்ளது போன்று உடலின் பின்பகுதியை வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மடக்கி வலது கால் பாதமானது இடது தொடை மீது வயிற்றுடன் ஒட்டிய நிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும். 2 கைகயையும் மார்புக்கு நேராக கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
இது தான் ஆஞ்சநேய ஆசனத்தின் அமைப்பாகும். இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும். ஆசனப்பயிற்சியின் போது சுவாசம் சாதாரண நிலையில் இருப்பதுடன் செய்து முடித்த பின்பு கால்களை மாற்றி இதே முறையில் வலது காலை ஊன்றி ஆஞ்சநேய ஆசனத்தை செய்யலாம்.
பயன்கள் :
முகம் பொலிவு பெறவும், தொடை தசை இறுக்கம் குறையவும், தட்டையான பாதத்தை சரி செய்யவும், மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது. முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.