ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

உங்கள் நகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் என்ன நோய் வரும் தெரியுமா?

உங்கள் நகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் என்ன நோய் வரும் தெரியுமா?

நமது உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் தொடர்பு உடையவை. நம் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் நமக்கு தெரியவரும். அந்த வகையில், நாம் அடிக்கடி நகத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

நகங்களின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆபத்தானதாகத் தெரியவில்லை. இருந்தாலும், சில சமயங்களில் இது நாள்பட்ட நோய்களின், குறிப்பாக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

இது நமது ஆரோக்கியத்தின் கண்ணாடியாக செயல்படுகிறது. அந்த வகையில், நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும்.

அதனால். அவர்கள் உடல்நலத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். நகத்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது, ஏனெனில் இது புற்றுநோயைக் குறிக்கலாம்.

புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம். சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். இவை அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும்.

இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம். நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும். அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம். சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும்.

அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும். தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும்.

சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker