புதியவைவீடு-தோட்டம்

வீட்ல கரண்ட் பில் கம்மியா வரணும்னா இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

வீட்ல கரண்ட் பில் கம்மியா வரணும்னா இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க...

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது என்று கூறினால் நம்ப முடிகிறதா? வெயில் காலத்தைவிட குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நமது வீட்டில் அதிகம் பயன்படுகின்றன. இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்து, கட்டணமும் உயர்கிறது.

பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மின்சாரத்தின் கட்டணம் அதிகரிக்கும் என்ற நிலையில், நாம் இது போன்ற தருணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பல்ப்

நாம் அறையில் இல்லாத சமயங்களில் நமது அறையில் லைட்டுகள் அணைந்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாம் பயன்படுத்தும் லைட்டுகள் கூட மின்சாரக் கட்டணத்தில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா. எல்இடி போன்ற பல்புகள் நமது வீட்டை வெளிச்சமாக வைத்திருக்க உதவும் ஆற்றல் கொண்டவை. அதே நேரத்தில் எல்இடி பல்புகள் மின்சார கட்டணத்தையும் சேமிக்க உதவும். மற்ற பல்புகள் உடன் ஒப்பிடும் பொழுது இதன் ஆயுட்காலமும் அதிகம்.

 

ஜன்னல்கள்

தூசு குப்பை மற்றும் பூச்சிகளிடம் இருந்து உங்களை பாதுகாப்பது போலவே, குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வராதவாறு உங்கள் கதவுகள் நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது என்ன முக்கியமான விஷயமா என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதாவது கதவுகளின் இடைவெளி மூலம் காற்று புகாதவாறு இருந்தால், உங்கள் வீடு எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருக்கும். உங்கள் ஜன்னல்களும் நன்றாகப் மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பிளக்குகள்

நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் அணைக்கப்பட்டு இருந்தாலும், நீங்கள் செருகி இருக்கும் பிளக்குகளை எடுத்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்தாலும் 50% மின்சாரமானது இந்த சமயங்களில் பயன்படுத்தப்படலாம். எனவே உங்களது ஸ்விட்சை அணைத்து விட்டவுடன், பிளக்குகளை பிடிங்கி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

​திரைச்சீலைகள் அல்லது கர்ட்டன்

ஜன்னல் மூடப்பட்டு இருந்தாலும், சில சமயங்களில் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் பிரவேசிக்க முடியும். அந்த மாதிரி தருணங்களில் நல்ல கெட்டியான திரை சீலைகள் இதுபோன்ற குளிர்ந்த காற்றினை உள்ளே விடாமல் வெளியேற்ற உதவும். அதிகமான ஜன்னல்கள் உள்ள வீட்டிற்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

​வாட்டர் ஹீட்டர்
குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது என்பதால் நாம் சூடான நீருக்காக கீசர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த சாதனங்கள் அதிக சூடாகும் போது, சூடான தண்ணீரை சமன் செய்ய குளிர்ந்த தண்ணீரையும் அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் தண்ணீரின் அளவும் அதிகரித்து மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அளவான சூட்டில் நீரை பயன்படுத்துவது குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு சமமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker