ஆரோக்கியம்புதியவை
சிறுநீர் போகும் போது எரிச்சல் இருக்கா? இதனை எப்படி போக்கலாம்?
சிறுநீர் போகும் போது எரிச்சல் இருக்கா? இதனை எப்படி போக்கலாம்?
பொதுவாக சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று நினைக்க கூடாது.
அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர்.
இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. அந்தவகையில் தற்பாது இதனை தடுக்கும் ஒரு சில எளிய வழிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
- சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
- தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
- ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்
- நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.