இந்த 4 ராசிகளில் உங்க மனைவி இருக்காங்களா? அப்போ நீங்க பேரதிர்ஷ்டசாலியாம்
இந்த 4 ராசிகளில் உங்க மனைவி இருக்காங்களா? அப்போ நீங்க பேரதிர்ஷ்டசாலியாம்
ஜோதிடத்தின் மூலமாக ஒருவரது எதிர்காலம், அவர்களின் குணம், சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள தற்போது முடிகின்றது.
இதே போன்று ஒவ்வொரு ராசிகளில் பிறந்திருப்பவர்களின் குணநலன்களும் நம்மால் அறியமுடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 ராசிக்கார பெண்ணை திருமணம் செய்தால், குறித்த கணவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், பேரதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர்களாம்.
கடகம்
கடக ராசிப்பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சிகயாகவும், தூய்மையான பாசத்துடனும் இருப்பார்களாம். மற்றவர்களை மகிழ்விக்கும் கலையைக் கொண்ட இவர்கள், தங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவரையும் நேசிப்பவர்களாகவே இருப்பார்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது மட்டுமின்றி, அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்களாம்.
துலாம்:
இந்த ராசிக்கார பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பதுடன், கணவரை சோர்வடையாமல் கவனித்துக் கொள்வார்களாம். மிகச்சிறந்த மனைவியாக திகழும் இவர்கள், வீட்டிலும் சரி வெளியிலும் சரி பொறுப்புகளை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.
கும்பம்:
சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்கும் கும்ப ராசி பெண்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதுடன், தன்னுடைய துணையையும் மகி்ச்சியாகவும், வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய விடயத்தினை செய்து கொண்டே இருப்பார்கள். கணவரை அதிகமாக நேசிக்கும் இவர்கள் அவரது குடும்பத்தையும் அதிகமாகவே நேசிப்பார்களாம்.
மீனம்:
அன்பினால் கணவரின் இதயத்தை ஆழும் மீன ராசிக்கார பெண்கள், கணவரை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். வீட்டில் இருப்பவர்கள் மீதும் அன்பு மழையை பொழியும் இவர்கள், எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையும் சமாளித்து வந்துவிடுவார்களாம்.