ட்ரை ஸ்கின் இருக்கா? மறந்தும் இந்த 5 பொருள்களை யூஸ் பண்ணிடாதீங்க, மோசமாயிடும்!
ட்ரை ஸ்கின் இருக்கா? மறந்தும் இந்த 5 பொருள்களை யூஸ் பண்ணிடாதீங்க, மோசமாயிடும்!
குளிர்காலம் வந்தாலே சருமத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அதிக வறட்சியை எதிர்கொள்ள நேரிடும்.
வறண்ட சருமத்தினர் எல்லா காலங்களிலும் சருமத்தை பிரத்யேகமாக கவனித்துகொள்ள வேண்டும். குறிப்பாக குளிர்காலங்களில் தோல் வறட்சி இன்னும் அதிகமாக இருக்கும். வறண்ட சரும பிரச்சனைகளை கொண்டிருப்பவர்களுக்கு இந்த வானிலை பெரும் அழிவை உண்டாக்கலாம்.
வறட்சி சருமத்தை போக்குவதில் சரியான தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு சிரமமானதாக இருக்கலாம். எனினும் இயலாத விஷயம் அல்ல. அப்படி தேர்வு செய்யும் போது நீங்கள் தவிர்க்க வேண்டியது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
வறண்ட சருமத்தினர்
எல்லா வகை சருமத்தினருக்கு ஏற்ற தயாரிப்புகள் வெளியில் கிடைக்கின்றன. உங்களது சருமம் என்ன மாதிரியானது என்பதை அறிந்து அதற்கேற்ற சரியான தயாரிப்பை தேர்வு செய்வது அவசியம். அதே நேரம் உங்கள் சருமத்துக்க்கு பொருந்தாத ஒன்றையும் தேர்வு செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் ஈரப்பதம் இல்லாததால் உண்டாகிறது. இது சருமத்தின் குறைவான உற்பத்தியால் ஏற்படுகிறது. வறண்ட சருமத்தை ஒருவர் கொண்டிருந்தால் சீரற்ற அமைப்புடன் மெல்லிய கடினமான தோலை கொண்டிருக்கலாம்.
இது மரபியல், பருவம் மற்றும் வயது போன்ற பல காரணிகளை கொண்டிருக்கலாம். சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக்குவது, நீரேற்றமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம்.
சருமத்தை உலர்த்தும் தன்மை கொண்ட தயாரிப்புகள் சருமத்துடன் வினைபுரிந்து மேலும் வறட்சியை உண்டாக்கும். அது சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தையும் எடுத்து செல்ல உதவுகிறது. அப்படி நீங்கள் விலகி இருக்க வேண்டிய தயாரிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
ஆல்கஹால் கலந்த தயாரிப்புகள்
ஆல்கஹால் தோல் பராமரிப்பு பொருள்களில் பாக்டீரியா எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. அதோடு இவை சருமத்தில் கடுமையான சேதத்தை உண்டாக்கும். அதிக அளவில் ஆல்கஹால் பயன்படுத்துவது எரிச்சலூட்டும் மற்றும் சருமத்தை மேலும் உலர்த்தும்.
மற்ற விளைவுகளில் தோலின் நுண்னுயிரியின் பலவீனம் மற்றும் சீர்குலைவு போன்றவை வெளியேறும். இது சருமத்தில் சரியான முறையில் பயன்படுத்தும் போது சருமத்தை ஆற்றுகிறது, புத்துயிர் பெற உதவுகிறது. எனினும் வறண்ட சருமத்தினர் இதை தவிர்க்கவே வேண்டும்.
கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலம் ஒரு பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம் (BHA). இதன் மிகச்சிறிய மூலக்கூறுகள் காரணமாக, கிளைகோலிக் அமிலம் தோலில் எளிதில் ஊடுருவி, ஒரு எக்ஸ்போலியேட்டராக செயல்படும்.
கிளைகோலிக் அமிலம் சருமத்தின் சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கி மேலும் சருமத்தை உலர வைக்கும். அதனால் வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்கள் கிளைகோலிக் அமிலம் சேர்த்த தயாரிப்பை தவிர்ப்பதோ அல்லது அளவு குறைத்து பயன்படுத்துவதோ நல்லது.
சாலிசிலிக் அமிலம்
சாலிசிலிக் அமிலம் மற்றொரு பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம். இதுவும் சருமத்தை சிறப்பாக எக்ஸ்ஃபோலியண்ட் செய்யும். சாலிசிலிக் அமிலம் முகப்பருவை குறைப்பதாக அறியபட்டாலும் இது மிகவும் கடுமையானது மேலும் உங்கள் சருமத்தை எரிச்சலூட்டக்கூடியது அல்லது மேலும் உலர்த்தக்கூடியது.
வறண்ட சருமத்தினருக்கும் உணர்திறன் சருமம் கொண்டவர்களுக்கும் சாலிசிலிக் அமிலம் நல்லதை விட அதிக தீங்கையே உண்டாக்கும்.
பாரபின்
பாரபின் என்பது செயற்கை இராசயனங்கள் ஆகும். இது தோல் பராமரிப்புக்கு மட்டும் அல்ல, உணவு பானங்கள் மற்றும் மருந்துகளிலும் கூட பாதுகாப்பாக இவை பயன்படுத்தப்படுகின்றன. இது பாதுகாப்பு பொருளாக பொருளின் ஆயுளை அதிகரிக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் தயாரிப்பில் தளராமல் தடுக்க செய்கிறது. இந்த பாரபின்கள் சருமத்தால் உறிஞ்சப்பட்டு தீங்கு விளைவிக்கும்.
வாசனை திரவியங்கள்
பொதுவாக சரும பரமாரிப்புக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், மாய்சுரைசர் முதல் க்ளென்சர்கள் வரை எல்லா பொருள்களிலும் நறுமணத்தை பார்க்கலாம். நல்ல நறுமணம் கொண்ட தயாரிப்பு உங்களை மேலும் ஈர்க்கலாம். ஆனால் சிலருக்கு வாசனை மிகுந்த திரவியங்கள் பிடித்தாலும், அவர்களின் சருமத்துக்கு அது மோசமாக இருக்கும்.
இயற்கையான அல்லது செயற்கையான வாசனை திரவியங்கள் எல்லாமே சருமத்துக்கு உணர்திறன் போல செயல்படும். அதிக அளவுகளில் இதை பயன்படுத்தினால் அதிக உணர்திறன் மற்றும் வறண்ட சருமம் கொண்டிருப்பவர்களுக்கு சொறி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். வாசனை திரவியங்கள் பொதுவாக கண்டறியப்பட்ட ஒவ்வாமைகளாகும்.
இது கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சருமத்தை மிகவும் சேதப்படுத்தும். சமயங்களில் தோல் அழற்சியை உண்டாக்கும்.