ஃபேஷன்அழகு..அழகு..எடிட்டர் சாய்ஸ்புதியவை

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை… செமி ரா சில்க் சேலைகள்

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... செமி ரா சில்க் சேலைகள்

செமி ரா சில்க் சேலைகள்
கடைகளுக்கு சென்று புடவைகளைத் தேர்வு செய்யும் பொழுது அதிகப் பார்வையாகவும் அதே சமயம் நம் பட்ஜெட்டிற்குள் வருவதாகவும் இருக்கின்றதா என்று பெண்கள் யோசிப்பதைப் பார்க்க முடியும். நிச்சயம் அதுபோன்ற புடவைகளில் எத்தனையோ ரகங்களும், டிசைன்களும் நாம் வாங்கக் கூடிய விலையில் இருக்கும் புடவையைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேற்கூறிய அம்சங்களுடன் பெண்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்டும் புடவைகளில் ஒன்றுதான் செமிரா சில்க் சேலைகள். சில்வர் ஜரிகைகள், பைபிங் பார்டர்கள், தங்க ஜரி பாடர்கள் என ஏராளமான ரகம் மற்றும் டிசைன்களில் வந்திருப்பவை செமிராசில்க் சேலைகள் என்றால் அது மிகையாகாது.

செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது. இந்தப் புடவைகளை உலர் சலவைக்குத்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் வீட்டிலேயே மென்மையான ஷாம்ப்பூக்களை உபயோகப்படுத்தித் துவைக்கலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

தோற்றப் பொலிவுடன் விளங்கும் இந்த புடவைகள் கோவில்கள் மற்றும் பூஜைகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கின்றன. அடர்ந்த நீலம் பச்சை கருப்பு சிவப்பு, நிலம் மெருன் இளஞ்சிவப்பு, இளம்பச்சை

ஸ்டீல் கிரீன், காப்பர் சல்ஃபேட் நீலம் என பல வண்ணங்களில் சில்வர் ஜரிகைகளில் உடல் முழுவதும் பெரிய புட்டாக்களும், கையகல பார்டர் மற்றும் அதிக வேலைப்பாட்டுடன் இருக்கும் பல்லுவுடன் மிகவும் அருமையாக வந்திருக்கும் இந்த வகை செமிராசில்க் புடவைகளை திருமண வரவேற்புகளுக்கு அணிந்து செல்லலாம்.

பாவன்ஜி பாடர்கள் சேலையின் மேற்புறம் மற்றும் கீழ்புறம் என இரண்டு புறமும் தங்க நிற ஜரிகையில் மின்ன உடல் பகுதி முழுவதும் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளில் பெரிய புட்டாக்கள் இடம் பெற்று பல்லுவானது மெல்லிய கோடுகளுடன் பார்ப்பதற்கு வித்தியாசமான அழகுடன் திகழ்கின்றது. காக்கி, பிங்க், மயில் கழுத்து நிறம், வோய்ன் நிறம் என அருமையான வண்ணங்களில் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளின் ஆதிக்கம் அமர்க்களமாக உள்ளது.

சிலருக்கு பெரிய பார்டர்களைக் கொண்ட புடவைகளை அணிவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே பைபிங் பாடர்கள் வந்திருக்குமோ என எண்ணத் தோன்றுக்கின்றது. பீச்நிறம் உடல்பாகத்திற்கு வாடாமல்லி பைப்பிங் பார்டரும் அதனை யொட்டி எளிமையான ஜரி வேலைப்பாடும், உடல் முழுவதும் புட்டாக்கள், ஜிமிக்கி கம்மல் என ஜரி வேலைப்பாடுகளுடன் வரும் இது போன்ற செமிராசில்க் சேலைகளின் விலையோ ஆயிரம் ரூபாய்க்குள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? இந்த சேலைகளில் ஸ்டீல் கிரீனுக்கு மஜந்தா பைபிங் பார்டர், கிரே நிறத்துடனிருக்கும் நீலத்திற்கு மெரூன் பைபிங் பார்டர், இளம் பச்சை நிறத்திற்கு சிவப்பு பைபிங் பார்டர், மஞ்சள் நிறத்திற்கு நீலநிற பைபிங் பார்டர் என்று வரும் கலர் காம்பினேஷன்கள் எதை எடுப்பது எதை விடுப்பது என்று நம்மை திணற வைக்கின்றன.

உடல் முழுவதும் பூ டிசைன்களாக இருக்க, இரண்டு பக்க தங்க ஜரி பார்டர்களுக்கு எளிமையான பல்லு மற்றும் புடவையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும் பிளெயின் நிற ஜாக்கெட், அப்பப்பா இத்தனை அழகா என்று நம்மை வாய் பிளக்கம் விதமாக அடர்ந்த நீலம், மஞ்சள், கிரே, பச்சை, தக்காளி சிவப்பு, பிங்க், மஸ்டர்டு என பல வண்ணங்களைக் கொண்ட பூந்தோட்டம் போல இந்தப் புடவைகள் காட்சி அளிக்க இதில் எந்த வண்ண பூந்தோட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிவப்பு, மெரூன், மஜந்தா, பீச், பிங்க், கிரே, டார்க் பீச், சப்போட்டா நிறம், நேவி ப்ளூ, மென்மையான சிமெண்ட் கிரே, சிவப்பு என வானவில்லை மிஞ்சும் வண்ணங்களில் ஆன்டிக் ஜரி பார்டர்களுடன், உடலில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் வரும் புடவைகள் மென்மை மற்றும் பளபளப்புடன் மைசூர் பட்டுச் சேலைகளை நினைவு படுத்தும் விதமாக உள்ளன.

உடல் முழுவதும் மயில், பூக்கள், அன்னம், யானை, மான் என உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு மிகவும் குறைவான எடையுடன் இரண்டு பக்க ஜரி பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வரும் புடவைகள் அணிந்து கொள்ள இலகுவாக உள்ளன. இது போன்று பிரிண்ட் செய்யப்பட்டு வரும் செமிராசில்க் புடவைகள் அலுவலகங்களுக்கும் சிறு விழாக்களுக்கும்அணிந்து செல்ல ஏற்றவை என்று சொல்லலாம்.

சில்வர் ஜரியில் பைபிங் பார்டர், அதனை ஒட்டி பைபிங் கருப்பு பார்டர், உடலானது பீட்ரூட் வண்ணத்தில் இருக்க, உடலில் ஆங்காங்கே கருப்பு நூலினால் நெசவு செய்யப்பட்ட புட்டாக்கள், சற்றே கற்பனை செய்து பாருங்கள். எந்த வண்ணத்திலும் கருப்பை சேர்க்கும் பொழுது அது மிகவும் எடுப்பான தோற்றத்தைத் தரும் என்பதை கண்களை மூடிக்கொண்டே சொல்லலாம். ஹாஃப் வொயிட்டில் கருப்பு, மயில் வண்ணத்தில் கருப்பு, பிங்க்கில் கருப்பு, கிரே வண்ணத்துடன் கருப்பு, வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்பு, மஸ்டர்ட் நிறத்தில் கருப்பு, வெளிர் நீலத்தில் கருப்பு, மஜந்தாவில் கருப்பு நூல் புட்டாக்களுடன் வரும் இந்த வகையான செமிராசில்க் சேலைகள் எளிமையாகவும் அதே நேரத்தில் எடுப்பான தோற்றத்துடனும் விளங்குகின்றன. உடல் முழுவதும் ஜீயோமெட்ரிக் பிரிண்ட்டுகளுடன் புடவையின் இருபுறமும் பாவன்ஜி பார்டர்கள் என பல்வேறு வண்ணங்களில் வரும் இந்தப் புடவைகள் பரிசளிக்க ஏற்றவை என்றே சொல்லலாம்.

புடவையின் இருபுறமும் சில்வர் ஜரியினால் ஆன கோபுர பார்டர்கள் மற்றும் உடலில் பூ டிசைன்கள் சில்வர் ஜரிகைகளால் நெசவு செய்யப்பட்டிருப்பது மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றது.

புடவையின் மேற்புறம் சிறிய பார்டரும், கீழ்ப்புறம் பெரிய பார்டரும் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் ஒரே அளவிலான பார்டர்கள் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் பைபிங் பார்டர்கள் இருப்பது போன்றும் வடிவைமக்கப்பட்டு வரும் இவ்வகை செரமிராசில்க் புடவைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker