அனைவரும் விரும்பும் பிளாட்டின நகைகள்
கிடைப்பதற்குரிய உலோகமான பிளாட்டினத்தை அன்பின் பரிசாக, அன்பின் அடையாளமாக கொண்டு நகைகள் வடிவமைக்கப்படுகின்றது. மிக உறுதியான வெள்ளை உலோகமான பிளாட்டின நகைகள் எந்த வகையிலும் அதன்வடிவத்தில் மாற்றம் பெறாத தன்மை கொண்டது. இதன் திடத்தன்மை அதிகமாக காட்சி தருவதால் சிறிய எடை கொண்ட நகை கூட பெரிய அளவிலானதாக தெரியும். நாம் எவ்வளவு நாள் அணிந்திருந்தாலும் உடல் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. இதன் காரணமாக பிளாட்டினம் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் நகையாகவே விளங்குகிறது.
பிளாட்டின நகைகளின் அணிவகுப்பு
பிளாட்டின நகைகள் என்பது ஆண்,பெண் இருபாலருக்கும் ஏற்றவாறு அழகிய நகைகளாக உருவாக்கப்படுகின்றன. அதாவது மோதிரம், நெக்லஸ், காதணி, செயின், பிரேஸ்லெட் என்றவாறு அனைத்து நகைகளும் பிளாட்டினத்தில் ஜொலிக்கின்றன. இவையனைத்தும் நமது பாரம்பரிய தங்க நகைகள் போல் வடிவமைக்கப்படாது தனிப்பட்ட நேர்த்தியுடன் கூடுதல் வடிவமைப்பு உத்தியுடன் அதிக கவனத்துடன் இதன் நகை உருவாக்கம் உள்ளது. பார்த்தவுடன் மனதை மயக்கும் வகையிலும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் நகைகள் உள்ளன.
நேர்த்தி மிகு நெக்லஸ் ஜோடி நகைகள்
நெக்லஸ் செட் நகைகள் என்பது அதே வடிவமைப்புடன் கூடிய அழகிய காதணியும் இணைந்தவாறு கிடைப்பது. இதில் ஒவ்வொரு நெக்லஸ்-ம் ஒரு ஓவியம் போல் அழகுடன் உள்ளன. மெல்லிய அளவில் இரட்டை அடுக்கு கொண்ட நெக்லஸ் அமைப்பில் சிறு மொட்டுகள் மற்றும் இதழ்கள் உள்ளது போன்று இருபுறமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சிறு மொட்டுகளின் நடுவே சிறு வொர்க் கற்கள் பதியப்பட்டுள்ளன. அதாவது சிறு கொடி ஒன்று இரு வளைவுகளில் படர விட்டபடி தனித்துவ சிற்பம் போல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது போல் இதழ்களுடன் தொங்கும் படியான காதணியும் இணைப்பாக கிடைக்கின்றன. இதுபோன்று சில நெக்லஸ்கள் ஒற்றை வரிசையின் சிறு சிறு மொட்டுகள் இணைப்புடன் நடுவில் வட்ட வடிவ ஹை கற்கள் பதியப்பட்டவாறு அழகுடன் உலா வருகின்றன. இதன் நடுப்பகுதியில் புதிய வடிவமைப்பிலான பதக்கங்கள், பெனன்ட் இணைந்தவாறு உருவாக்கப்படுகின்றன. இந்த பெனன்ட் என்பதில் நிறைய வைரங்கள் பதியப்பட்ட பூக்களும், உருவங்களும் பிரதான இடம் பிடிக்கின்றன. கம்பிகள் இணைந்த மூன்றடுக்கு மணிகள், சுருள் சுருளான நெக்லஸ்கள் போன்றவை ரோஸ் பந்துகள் ஆங்காங்கே பதிய விட்டப்படி அழகிய நேர்த்தியுடன் காட்சி தருகிறது.
வலைப்பின்னல் பிரேஸ்லெட்கள்
பிரேஸ்லெட்டுகள் என்பது செயின் அமைப்பின் படர விடப்படாது வளையல் அமைப்பில் மாட்டும்படி அழகான வித்தியாசத்தில் வடிவங்குளுடன் உலாவருகின்றன. அதாவது பாதி பகுதி மெல்லிய கம்பி அமைப்பு, மீதி பாதியில் அகல வடிவில் பல கம்பிகள் இணைந்தவாறு உருவாக்கம் செய்யப்பட்டு அதன் நடுவே வைரக்கற்கள் வைத்து அதன் உருவத்தை மேம்படுத்தியுள்ளனர். மெல்லிய செயின் அமைப்பில் நடுவே பூக்கள் மற்றும் நாற்கோண அமைப்புகள் ஹை கற்கள் பதித்தபடியான பிரேஸ்லெட்கள் அழகுற உள்ளன. மேலும் நடுப்பகுதியில் அழகிய பந்துகள், வண்ணப்பந்துகள், அகலமான பட்டை பதக்கங்கள் கொண்ட பிரேஸ்லெட்டுகளாக வருகின்றன. ஒரே மாதிரியான வளையங்கள் பின்னப்பட்டவாறு உள்ள பிரேஸ்லெட்டுகளில் ஒவ்வொரு வளையத்தில் இருபகுதிகளிலும் வைரகற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
ஆண்களுக்கான பிளாட்டின நகைகள்
ஆண்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் விதவிதமான செயின்கள், பிரேஸ்லெட்கள், மோதிரம் மற்றும் சூட் பட்டன்கள், பதக்கங்கள் பிளாட்டினத்தில் உருவாக்கித்தரப்படுகிறது. ஆண்கள் அணிய ஏற்றவாறு மெல்லிய வடிவமைப்பு செயின்கள் வித்தியாசமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஆண்களின் ஆளுமையை பிரதி பலிக்கும் வகையிலான இதன் தோற்ற அமைப்பு மாறுபட்ட வகையில் உள்ளன. சிறு சிறு வேறுபட்ட அளவுடைய கம்பி வளைவுகள், பந்துகள், கூம்பு வடிவங்கள் இணைக்கப்பட்ட செயின்கள் நடுநடுவே ரோஸ் கோல்டு வண்ண பூச்சு செய்யப்பட்டவாறு வருகின்றன.
ஆண்களுக்கான பிரேஸ்லெட்கள் என்பது பட்டையான செயின்கள் கொண்டவாறு அதில் விதவிதமான புதிய விடிவமைப்புகள் செய்யப்பட்டவாறு உள்ளன. அதுபோல் திரட் அமைப்பிலான சுருள் பிரேஸ்லெட்கள் கயிறு போன்று கனமான உருளை அமைப்புடன் அதிக பின்னல்கள் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டவாறு உள்ளன. அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.