ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஹனி சில்லி உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

உருளைக்கிழங்கை பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், இதில் சிக்கனுக்கு நிகரான சுவை உள்ளது. உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.

உருளை கிழங்கைவைத்து ஹனி சில்லி பொட்டேடோ செய்வது எப்படி என நாங்கள் கூறுகிறோம். இதோ உங்களுக்கான ரெசிபி….

தேவயான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 6

சோள மாவு – 3 ஸ்பூன்.

பூண்டு – 2 ஸ்பூன் நறுக்கியது

இஞ்சி – 2 ஸ்பூன் நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது.

வெங்காயம் – 1/2 நறுக்கியது.

பச்சை குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது.

உப்பு – 1/2 ஸ்பூன்.

மிளகு தூள் – 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

சோயா சாஸ் – 1 ஸ்பூன்.

சில்லி சாஸ் – 2 ஸ்பூன்.

தக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்.

தேன் – 1/4 கப்.

வெங்காயத்தாள் கீரை – சிறிது.

வெள்ளை எள்ளு – கால் ஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

முதலில், உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சரியான பதத்திற்கு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். நன்கு ஆறவிடவும்.

உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து சேர்த்து உருளைக்கிழங்குடன் நன்கு கலந்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.

அடுத்து ஒரு அகல பானில் எண்ணெய், நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.

பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு நறுக்கிய பச்சை குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவும். உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

அடுத்து சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து விடவும்.

பின்பு அடுப்பை அணைத்து விட்டு தேன் சேர்த்து கலந்து விடவும். பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.

இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கீரை, வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து விட சுவையான ஹனி சில்லி உருளைக்கிழங்கு தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker