உறவுகள்உலக நடப்புகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள்

தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள்

தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள்

தவிர்க்க முடியாத ஆன்லைன் வகுப்புகள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாணவர்களின்கல்விபாதிக்காத வகையில் அவர்களுக்குஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடு தான் வகுப்பு என்றாகிவிட்டது.. அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ஆன்லைன்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கல்வியும் அவசியம், அதேநேரத்தில் கண்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை உணர்ந்து மாணவ-மாணவிகள் தங்களின் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் செல்போன், கணினியிடம் இருந்து சிறிது நேரம் விலகி இருக்கவேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker