ஆரோக்கியம்டிரென்டிங்புதியவை

ட்ரெட்மில் பயிற்சியில் செய்யக்கூடாத தவறுகள்

ட்ரெட்மில் பயிற்சியில் செய்யக்கூடாத தவறுகள்

ட்ரெட்மில் பயிற்சி
இப்போதெல்லாம் வாக்கிங் செல்பவர்களைவிட, ட்ரெட்மில்லில் ஓடுபவர்கள்தாம் அதிகம். பலரும் இதை வரப்பிரசாதமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி செய்பவர்கள் அதிகமாகி விட்டார்கள்.

சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக, நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு.

இதய செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்சினை தீரும். ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள் வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப்பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டு வலிப் பிரச்சினை சரியாகும். ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

பின் முதுகில் வலி இருப்பவர்கள், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யக்கூடாது. ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது, அதற்கு தேவையான ஷூ வகைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூட்டுவலி, குதிகால் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ட்ரெட்மில்லில் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் சில நாட்களுக்கு மூட்டுவலி, கால்வலி போன்றவை ஏற்படும். அவற்றைப் பொருட்படுத்தாமல், அன்றாடம் பயிற்சி மேற்கொண்டால், போகப் போக பிரச்சினை சரியாகிவிடும். மற்ற நேரத்தைவிட, காலை நேரத்தில் ட்ரெட்மில் பயிற்சி செய்வது நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும். வெகு நாட்கள் கழித்து ட்ரெட்மில் பயன்படுத்துபவர்கள், புதிதாக உபயோகிப்பவர்கள், நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே அதிக நேரம் ஓடக்கூடாது. அரை கிலோ மீட்டரில் இருந்து தொடங்கலாம். ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நாள் இடைவெளியில் இந்த நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்துக்கொள்ளலாம்.

ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக்கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையை துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது.

ட்ரெட்மில்லின் சிறப்பு, அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பது சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் எந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும். பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker