ஃபேஷன்ஆரோக்கியம்புதியவை

பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க சில குறிப்புகள்

பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க சில குறிப்புகள்

பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க சில குறிப்புகள்

 


முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள கண்டிப்பாக முடியும். பொதுவாகவே திருமணத்துக்கு பிறகு பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.

இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.

மனநிலை முக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உடல் மேல் கவனம்

நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும். உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.

பொழுதுபோக்கு

டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை…

ஆரோக்கியமான உணவு

நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

நல்ல நட்பு

எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது. நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது நம் மனநிலை. வயதாகிவிட்டது என்ற மனநிலையை தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker