ஆரோக்கியம்புதியவை

கோடை வெப்பமும்.. கண்கள் பராமரிப்பும்..

கோடை வெப்பமும்.. கண்கள் பராமரிப்பும்..

கோடை வெப்பமும்.. கண்கள் பராமரிப்பும்..
கோடை காலத்தில் கண்களுக்கு குளிர்ச்சி தேவை. உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் கண்களும் ஆரோக்கியமாக இருக்கும். மற்ற பருவ காலங்களை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் காலையில் மட்டுமின்றி மாலையிலும் தலைக்கு குளிப்பது நல்லது.

அதுபோல் தலைக்கு தவறாமல் எண்ணெய் தேய்ப்பதும் அவசியமானது. அது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். கண்கள் குளிர்ச்சியாக இருப்பதற்கும் வழிவகுக்கும்.

தலையை சுத்தமாக பராமரிக்காவிட்டாலும் கண் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமானது.

லேப்டாப், கணினி பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் சோர்வு எட்டிப்பார்ப்பது இயல்பானது. கோடையில் இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி முகம் கழுவுவது நல்லது. கண்களை நன்றாக மூடிய நிலையில் இமைகள் மீது தண்ணீரை ஒற்றியபடி கழுவுவது சிறப்பானது. அது கண்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பும் எட்டிப்பார்க்கும்.

வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். அவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி பிரச்சினையையும் உண்டாக்கும். கண்களில் ஏதேனும் அசவுகரியம், தொடர்ந்து தலைவலி, பார்வை மங்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் பரிசோதிப்பது அவசியமானது.

கணினி முன்பு அமர்ந்து பணி செய்பவர்கள் அவ்வப்போது இரு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றி எடுக்கலாம். அப்படி இளம் சூட்டுடன் கண்களின் மீது வைப்பது இமைகளுக்கும், கண்களின் உள் அடுக்குகளுக்கும் இதமளிக்கும்.

சுடு நீரில் காட்டன் துணியை முக்கி மிதமான சூட்டில் கண்களின் மீது ஒற்றி எடுக்கவும் செய்யலாம். உபயோகித்த டீ பேக்கையும் கண்களின் மீது வைத்து ஒற்றி எடுக்கலாம்.

கண்களின் ஆரோக்கியம் காப்பதற்கு ஆழ்ந்த தூக்கமும் அவசியம். கோடை காலத்தில் சிலரது தூங்கும் நேரம் குறைந்து போகும். இரவில் தூக்கம் வரும் வரை செல்போனில் ஆழ்ந்திருப்பார்கள். அதுவும் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

கோடை காலத்தில் கண் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவது பொதுவானது. கண்கள் சிவத்தல், வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். அதிலும் கணினி முன்பு அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு கோடை காலத்தில் பாதிப்பு அதிகமாகும். கண் எரிச்சல் பிரச்சினை பிரதானமாக இருக்கும். சூரிய கதிர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும் கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணமாக அமைந்திருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker