சமையல் குறிப்புகள்புதியவை

மீந்து போன சாதத்தில் கலக்கலான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

அரிசி சாதம் – 1 கப்.

உருளைக்கிழங்கு – 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப் (பொடியாக நறுக்கியது).
வெங்காயம் – 1
இஞ்சி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்.
கொத்தமல்லி – சிறிது.
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்.
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்.
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்.
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட்ரெடி!!!

Related Articles

Close