அழகு..அழகு..புதியவை

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

உடலிலேயே மிகவும் மென்மையான ஒரு பகுதி தான் உதடுகள். இந்த உதடுகள் தான் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும்.

ஆனால் உதடுகளில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், அது முகத்தின் அழகையே மாற்றிவிடும்.

ஆனால் பலர் உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருக்கின்றனர் குறிப்பாக பலருக்கு உதடுகளில் வறட்சிகள் ஏற்படுவது வழக்கம். இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது.

அந்தவகையில் உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களை எப்படி எளிய முறையில் போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • தேங்காய் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.
  • கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
  • ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.
  • வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.
  • விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
  • தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.
  • கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.
  • 1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.
  • க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.

Related Articles

Close