ரவை வைத்து சூப்பரான வெஜ்ஜி ஸ்னாக்ஸ் ஐந்தே நிமிடத்தில் செய்யலாம்
தேவையான பொருட்கள்:
ரவை – 1/2 கப்
வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
பச்சை பீன்ஸ் – 1/4 கப் (நறுக்கியது)
காளான் – 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் க்யூப்ஸ் – 2
மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
தண்ணீர் – 2 கப்
பட்டாணி – 1/4 கப்
கேரட் – 1/4 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
ரிஃபைன்ட் ஆயில் – தேவையான அளவு
செய்முறை:
* 2 நடுத்தர அளவு உள்ள உருளைக்கிழங்கினை நன்கு வேகவைத்து அவற்றின் தோலை நீக்கி பிறகு அதனை கைகளால் மசித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
* பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், பொடிபொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பசளை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த காய்கறிகளான பீன்ஸ், கேரட் மற்றும் காளான், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சுமார் 4 முதல் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
* காய்கறி வதங்கியதும் அதனுடன் ரவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்களை சேர்க்கவும்.
* இப்போது கலவை கெட்டியாகும் வரை இன்னும் சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* கடைசியாக, நறுக்கிய மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு துருவிய சீஸ் க்யூப்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்போது 1/2 அங்குல தடிமன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வெண்ணெய் காகிதம் போடப்பட்ட பாத்திரத்தில் கலவையை பரப்பவும். பிறகு வெஜ்ஜி கலவையை 40 நிமிடங்களுக்கு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிரூட்டவும். அதன் பிறகு, கலவையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
* இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெஜ்ஜி துண்டுகள் மிருதுவாகும் வரை ஷாலோ பிரை செய்ய வேண்டும். துண்டுகளின் எல்லா பக்கங்களும் தங்க-பழுப்பு நிறமாகும் வரை வறுத்தெடுத்தால் போதும். அவ்வளவுதான், இந்த ருசியான ஸ்னாக்ஸை டீ மற்றும் காபியுடன் சேர்த்து பரிமாறலாம். குழநதைகள் கட்டாயம் விரும்பி சாப்பிடுவர்.